தமிழ் சினிமாவைப் பொறுத்த வரைக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றால் அது லைகா புரொடக்சன்ஸ் தான். விஜய் நடிப்பில் வெளியான “கத்தி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகிற்குள் தயாரிப்பாளர்களாக அடியெடுத்து வைத்தது “லைகா புரொடக்சன்ஸ்”. அப்போது லைகாவை தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் படியும், கத்தி திரைப்படத்தத் தடைசெய்யக் கோரியும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆனால் அதையெல்லாம் தாண்டி, ஒரு வெற்றிகரமான படத் தயாரிப்பு நிறுவனமாக இன்று கோலோச்சி வருகிறது “லைகா”. எனக்கு இன்னொரு பேர் இருக்கு,
கைதி எண்150, எமன், இப்படை வெல்லும், கரு, கோ கோ ஆகிய படங்கள் இவர்களின் தயாரிப்புகளே. இவை மட்டுமல்லாமல், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் “2.0” படத்தை இந்திய சினிமா வரலாற்றில் அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்படும் படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.
அதே போல் உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகி வரும் “சபாஷ் நாயுடு” திரைப்படத்தையும் “லைகா” நிறுவனமே தயாரிக்கிறது.
இந்த வரிசையில் இப்போது நடிகர் சூர்யாவும் இணைந்திருக்கிறார். சூர்யாவின் அடுத்தப் படத்தை லைகா தயாரிப்பது உறுதியாகி இருக்கிறது. சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் னடித்து வருகிறார். அந்தப் படத்தை “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” தயாரிக்கிறது. அந்த படத்தில் நடித்து முடித்ததும் “லைகா-சூர்யா” இணையும் ப்டத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.