நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கி வரும் படம் “என்.ஜி,கே”. சூர்யா நடித்துவரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள்.
“தானா சேர்ந்த கூட்டம்” படத்திற்குப் பிறகு சூர்யா நடித்துவரும் இப்படத்தை “ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்” சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயரிக்கிறார்கள். இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.
படத்தில் சூர்யாவின் பெயராகிய “நந்த கோபாலன் குமரன்” என்பதை சுருக்கித் தான் இப்படத்திற்கு “என்.ஜி.கே” என பெயர் வைத்துள்ளார்களாம். மேலும் இப்படத்தில் ஜெகபதி பாபு, ராம்குமார், இளவரசு, பாலா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள செல்வராகவன், அதிக நாட்கள் கொண்ட நீண்ட படப்பிடிப்பாக இது இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.