சூர்யாவுடன் கூட்டணி சேரும் சூப்பர் ஸ்டார்!!

News

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் செல்வராகவனின் “என்.ஜி.கே” படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் – செல்வராகவன் கூட்டணி இப்படத்திற்காக இணைந்திருக்கிறார்கள். ரகுல் பிரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகிய இரண்டு முன்னணி கதாநாயகிகள் இப்படத்தில் நடிப்பதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் ஏற்கனவே சொல்லி இருந்தது போல், இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க சூர்யா தயாராகி வருகிறார். ஏற்கனவே “அயன்”, “மாற்றான்” படங்களில் ஒன்றாக பணியாற்றிய இருவரும் மூன்றாவது முறையாக இப்படத்திற்காக இணைகிறார்கள்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி, மலையாளம் உட்பட பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக உறுதி செய்திருக்கிறார்கள். இந்தத் தகவலை இயக்குநர் கே.வி.ஆனந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மோகன் லால் தற்போது “ஒடியன்” என்கிற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே நடிகர் விஜயுடன் இணைந்து “ஜில்லா” படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.