கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.
கார்த்திக்கும், அவருடைய மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில் மிஸ்டர்.சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக், கெளதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.