முன்னணி பிரபலங்களின் பாராட்டில், சுழல் – தி வோர்டெக்ஸ் 2வது சீசன்

cinema news Web Series
0
(0)

முன்னணி பிரபலங்களின் பாராட்டில், சுழல் – தி வோர்டெக்ஸ் 2வது சீசன்

முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ மற்றும் பல பிரபலங்கள், பிரைம் வீடியோவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸ் 2ம் சீசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்

பிரைம் வீடியோ வெளியாகும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீரிஸின் 2வது சீசனின் ட்ரெய்லர் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் பிரபலங்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த க்ரைம் திரில்லர் வெப்சீரிஸின் 2வது சீசனை, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இதன் ட்ரெய்லர் வெளியானதிலிருந்தே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முன்னணி நட்சத்திரங்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நாக சைதன்யா, ஆர் மாதவன், அட்லீ, துஷாரா, லோகேஷ் கனகராஜ், எம் சசிகுமார், ஆர்யா, விஷ்ணு விஷால், அதிதி பாலன், மகத் ராக்வேந்திரா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் சுழல் வெப்சீரிஸின் இரண்டாவது சீசனை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

வால் வாச்சர் பிலிம்ஸ் தயாரிப்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில், பிரம்மா மற்றும் சர்ஜுன் K M இயக்கியுள்ள இந்த வெப்சீரிஸில், முதல் சீசனில் நடித்த கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீண்டும் முக்கிய கதாபாத்திரங்களில் திரும்பவுள்ளனர். அவர்களுடன் லால், சரவணன், கவுரி கிஷன் (முத்து), சம்யுக்தா விஷ்வநாதன் (நாச்சி), மோனிஷா பிளெஸ்ஸி (முப்பி), ரினி (காந்தாரி), ஸ்ரீஷா (வீரா), அபிராமி போஸ் (சென்பகம்), நிகிலா சங்கர் (சந்தனம்), கலைவாணி பாஸ்கர் (உலகு) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

சுழல் – தி வோர்டெக்ஸ் 2வது சீசன் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அங்கிலம் சப்டைட்டிலுடன் அமேசான் ப்ரைம் தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.