முன்னதாக ஐக்கிய England தமிழ்த்துறை பெண்கள் குழு சார்பாக England பாராளுமன்றத்தில் 19 ஏப்ரல் 2022 அன்று கொண்டாடப்பட்ட பெண்கள் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவிற்கு England பாராளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் அவர்கள் தலைமை தாங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று 23 ஏப்ரல் 2022 நடிகை ராதிகா சரத்குமார் அவர்கள் England தமிழ்துறை குழுவினருடன் இலண்டன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, நன்கொடைக்கான காசோலையை தமிழ்த்துறை குழுவினருக்கு வழங்கினார்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மீளுருவாக்கம் செய்ய 10 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் தேவைப்படுகிறது. நன்கொடை செய்ய விருப்பம் உள்ளவர் www.tamilstudiesuk.org என்ற தளத்தில் சென்று வழங்கலாம்.