பட்டியலில் இடம் பிடித்தாரா அமலாபால்?

அமலாபால், அவரது கணவர் இயக்குனர் விஜய்யை பிரிந்த பிறகு மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் கிருஷ்ணா இயக்கத்தில், கிச்சா சூதிப் நடிப்பில் வெளியான ‘ஹெப்புலி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். படம் ரூ.100 கோடிகளை வசூலித்து 75 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் ரூ.100 கோடிகளை வசூலித்த படங்களில் நடித்த நடிகைகளின் பட்டியலில் நடிகை அமலாபாலும் இடம் பிடித்துள்ளார். தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் […]

Continue Reading

மின்மினியாக விஷ்ணு விஷால், அமலாபால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `மாவீரன் கிட்டு’. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது விஷ்ணு, `கதாநாயகன்’, `சின்ட்ரல்லா’, `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் விரைவில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு `மின்மினி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Continue Reading

வடசென்னையில் ஐஸ்வர்யா ராஜேஷ்?

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு, முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு திடீரென நிறுத்தப்பட்டது. ஆஸ்கர் பரிந்துரைக்காக ‘விசாரணை’ படத்தை அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால், வடசென்னை படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருப்பதாக இயக்குனர் வெற்றிமாறன் விளக்கம் கூறியிருந்தார். ஆனால், இப்படத்தில் நடிப்பதாக கூறி, கால்ஷீட் கொடுத்திருந்த விஜய் சேதுபதி, படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அமலாபாலும் கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். […]

Continue Reading