சன்தோஷ் P ஜெயக்குமார் படத்தில் ஆர்யா

STUDIO GREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும்  படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.  இப்படத்தை ஹர ஹர மஹாதேவகி ,மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து  படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று காலை (29-11-2017) இனிதே நடைபெற்றது.  இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக “வனமகன்” சாயிஸா நடிக்கிறார்.   மேலும் பாலமுரளி பாலு இசையமைக்க, பல்லு அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பை கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குத்துக்கு பொறுப்பேற்றிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது.

Continue Reading

எப்படியெல்லாம் கேம் ஆடுறாங்கப்பா!

கடந்த வாரம் நடிகர் ஆர்யா ட்விட்டரில், “எனக்கு கல்யாண ஆசை வந்திடுச்சிங்கோ, ஆனா பொண்ணே கிடைக்கலீங்கோ.. என்னைக் கல்யாணம் கட்டிக்க விருப்பம் இருந்தா ப்ளீச் இந்த நம்பெர்க்கு கால் பண்ணுங்கோ” என்று வீடியோ ஒன்று அப்லோடியிருந்தார். ஆர்யாவைத் திருமணம் செய்ய பெண் இல்லை என்பதெல்லாம், “ரிசெர்வ் பேங்கிலேயே பணம் இல்லை” என்பது போன்று காதில் டன் கணக்கில் பூ சுற்றும் வேலை. ஆனால் அந்த வீடியோவை பார்த்த பலருமே நம்பியிருப்பார்கள். இதுவரை கால் செய்து பல்ப் வாஙியவர்கள் […]

Continue Reading

ஆர்யா வெளியிட்ட ”சீமத்துரை” ஃபர்ஸ்ட் லுக்!

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் “சீமத்துரை”. கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக வர்ஷா பொல்லம்மா  நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார். படப்படிப்பு ஆரம்பித்து வேகமாக வளர்ந்து வரும் சீமத்துரை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading

சிம்புவுக்கு அறிவுரை வழங்கிய நடிகர் விவேக்!

விடிவி கணேஷ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விவேக், சந்தானம் மற்றும் சிம்புவின் ரசிகர்களுக்கு “ தங்களுக்குப் பிடித்தவர்கள் பெயர் சொல்லும் போது மட்டும் கைதட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒரு விழாவென்று வந்துவிட்டால், யாருடைய பெயர் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு” […]

Continue Reading

பாகுபலியைத் தொடர்ந்து சங்கமித்ராவிலும் கட்டப்பா

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி’-2. வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், `பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சத்யராஜ், மற்றுமொரு வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறாராம். சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி. […]

Continue Reading

ஜீவா இயக்கும் படத்தில் ஆர்யா

‘கடம்பன்’ படத்தையடுத்து அமீர் இயக்கும் ‘சந்தனதேவன்’ படத்தில் ஆர்யா நடிக்கிறார். அவரது தம்பி சத்யாவும், இதில் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதில் மற்றொரு நாயகனாக ஜெயம்ரவி நடிக்கிறார். அடுத்து ஜீவா சங்கர் இயக்கும் புதிய படத்திலும் 2 நாயகர்களில் ஒருவராக ஆர்யா நடிக்கிறார். இதில் மற்றொரு ஹீரோ ஜீவா. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’, […]

Continue Reading

விலகல் ஏன்? விளக்கமளித்த ஸ்ருதிஹாசன்

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஆகியோர் நடிக்க இருப்பதாக இருந்த இப்படத்தில் இருந்து, சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ருதிஹாசனால் தொடர முடிய வில்லை என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இன்று தன் அறிவிப்பை வெளியிட்டது. அதுகுறித்து ஸ்ருதிஹாசன் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் […]

Continue Reading

சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகல்

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள படம் ‘சங்கமித்ரா’. சுந்தர்.சி இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகி இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘சங்கமித்ரா’ படத்தில் ஸ்ருதிஹாசனால் தொடர முடிய வில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். சமீபத்தில் பிரான்ஸில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

Continue Reading

சங்கமித்ராவுக்கு திரைக்கதை எழுதும் வெற்றிக்கூட்டணி

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா’. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படம், பிரான்சில் நடைபெற்று வரும் 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள `சங்கமித்ரா’ படக்குழு, அங்கு சங்கமித்ராவை அறிமுகம் செய்து, சில போஸ்டர்களையும் வெளியிட்டது. இதில் சுந்தர்.சி., ஹேமா ருக்மணி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. […]

Continue Reading

தமிழ் மொழிக்கு சமர்ப்பணம் : சுந்தர் சி

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா’. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா அடுத்த வாரம் (மே 18-ல்) பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101-வது படமாக பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. […]

Continue Reading