சரஸ்வதி பூஜைக்கு நாச்சியார் வருகை?

தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில் பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `நாச்சியார்’. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். […]

Continue Reading

புறக்கணிக்கப்பட்ட ஒரு கிராமத்தில் ஈடுபாடு காட்டும் இசைஞானி

கிராமம், அதன் மண் மற்றும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த்திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘களத்தூர் கிராமம்’. இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​. கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி. இவர் ஏற்கெனவே சில கன்னடப் […]

Continue Reading

பாலா படத்தின் மோஷன் போஸ்டர்

தாரை தப்பட்டை படத்தை அடுத்து பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நாச்சியார்’. இதில் ஜோதிகாவும், மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜி வி பிரகாஷும் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சூர்யா வெளியிட்ட இப்படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்திற்கான மோஷன் போஸ்டரை நாளை காலை 10 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் […]

Continue Reading

மொட்டை போட்டு, புருவத்தையும் எடுத்து விட்டார்கள் : இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் இசைக்கலைஞர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, “நான் திரைப்படங்களுக்கு இசையமைத்து 40 வருட காலங்கள் முடிந்து விட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் இந்த பேரண்டத்தில் நடக்கப்போவது […]

Continue Reading