‘கமல்ஹாசன் நற்பணி இயக்கம்’ சார்பில் நடைபெற்ற ‘மெகா மருத்துவ முகாம்’

மத்திய சென்னை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் கோமகன் கமல் தலைமையில் நடைபெற்ற மெகா மருத்துவ முகாமை தொடங்கி வைத்து நலத் திட்ட உதவிகள் வழங்கிய சமூகபோராளி நடிகர் திரு. ஆரி, பிக்பாஸ் புகழ் நடிகர் திரு. வையாபுரி, நகைச்சுவைத் தென்றல் நடிகர் திரு. ரோபோ சங்கர், மற்றும் அகில இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு. தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இந்த மருத்துவமுகாமில் கலந்து சிறப்பித்தவர்கள் ACS மருத்துவ கல்லூரி […]

Continue Reading

தமிழுக்கு நிதி வழங்கிய கமல்ஹாசன்

அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர். இதற்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கி பெரும் சுமையை குறைத்துள்ளது. இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கி உள்ளார். இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பங்கேற்றுப் பேசும் போது, “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் […]

Continue Reading

சேராதோர் சேர்க என்று கமல் அழைப்பு

அடிமேல் அடி வைத்து, அரசியலுக்கு வருவதற்கான அத்தனை வேலைகளையும் மிகவும் சூதானமாக செய்து வருகிறார் கமல்ஹாசன். அரசியல்வாதிகளுக்கு பதில் அளிப்பதில் இருந்து, மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வரை தேர்ந்த அரசியல்வாதியை விட, மிக நுணுக்கமாக காய்களை நகர்த்துகிறார். கொள்கை கருத்தியல் என்னவென்றே அறிவிக்காமல், கூட்டத்தை கூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தனது பிறந்தநாளான நவம்பர் 7ல் முக்கிய அறிவிப்பு என்று சொல்லிவிட்டு, மையம் விசில் என்ற ஒரு செயலியின் பேரை மட்டும் அறிமுகப்படுத்தி விட்டு, பட […]

Continue Reading

ஏப்ரலில் வெளிப்படுகிறதா கமலின் விஸ்வரூபம்?

2013-ல் கமல்ஹாசன் இயக்கத்திலும், நடிப்பிலும் வெளிவந்த `விஸ்வரூபம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர இருப்பதாகத் தகவல் வெளியானது. முதல் பாகத்தின் படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் வேலைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில காரணங்களால் அதன் படப்பிடிப்பு முழுமையடையாமல் போனது. சமீபத்தில் விஸ்வரூபம்-2 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து, அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து `விஸ்வரூபம் 2′ படத்தின் […]

Continue Reading

கமலின் ஜாதகம் கணித்த பண்டிட்

பிரபல சோதிடர் ராடன் பண்டிட் கமல்ஹாசனின் ஜாதகம் மிகவும் அற்புதமான ஜாதகம் என்றும், அவர் அரசியலுக்கு வந்தால் எதிர்க்கட்சி செயல் தலைவரான ஸ்டாலினை விடவும் அதிக வெற்றிகளை பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசனின் ஜாதகம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஜாதகத்தைப் போல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் . மேலும் கமல்ஹாசன் திரைப்படத்துறையில் பல வெற்றிகளை பெற்றாலும் தனது வாழ்க்கையை இன்னும் வாழவில்லை எனவும் ,அவர் இனிமேல் வாழப்போகும் வாழ்க்கைதான் மக்களுக்காக வாழும் வாழ்க்கை என தெரிவித்துள்ளார். […]

Continue Reading

இனியும் அப்படி கேட்காதீர்கள் : கமல்

இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “நல்லது செய்வதையும் பண்பறிந்து வெகு ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். அதேநேரத்தில் நல்லது செய்தால் மட்டும் போதாது, அதை சரியாக, சரியான மக்களுக்கு செய்ய வேண்டும். நல்லதை சரியாக செய்தால் தான் அது அரசியல். அந்த வகையில் தானத்தை தவறான ஆட்களிடம் கொடுப்பது கூட ஒரு தவறுதான். நான் […]

Continue Reading

முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் : கமல்ஹாசன்

இன்று 63வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளதாகவும், அதற்கான காரணத்தையும் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்துள்ளார். அவருடன் அவரது இளைய மகள் அக்‌ஷரா ஹாசனும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய கமல், “மழை நேரங்களில் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைநீரை அரசு அகற்றிவருவதால் மருத்துவ முகாமை நடத்துவதாக கமல் தெரிவித்துள்ளார். மருத்துவ […]

Continue Reading

புதுயுகம் செய்ய புறப்பட்ட கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் இன்று 63-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில், அதற்கான காரணத்தை நேற்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், “நாளை நான் என் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடியும் நண்பர்கட்கு… நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். […]

Continue Reading