படம் இயக்க வரும் கூத்து நடிகை

எம்மனசு தங்கமான நடிகை, சில நாட்களாக கவர்ச்சியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். இந்த புகைப்படத்தால் நடிகைக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால், படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார் நடிகை! இதற்குமுன் ஒரு பேட்டியில், படம் இயக்குவது என்னுடைய ஆசை என்று கூறியிருந்த அவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால், படத்தை இயக்க இருக்கிறாராம். இதையறிந்த சில நடிகைகள், நடிகைக்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் எந்தப் […]

Continue Reading

ஏற்றம் தந்த இயக்குநர் மீது வருத்தத்தில் இருக்கும் நடிகர்

பறவை, விலங்கு பெயர்களில் காதல் படங்களை இயக்கிய அந்த இயக்குநர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ரயில் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், அந்த இயக்குநர் தற்போது அவருக்கு ராசியான விலங்கு படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. அந்த படத்தின் மூலம் புதிய நடிகரையும் அறிமுகப்படுத்துகிறாராம். இதனால் அந்த இயக்குநரால் ஏற்றம் பெற்ற தம்பி நடிகர் மனமுடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பறவை படத்தின் மூலம் தனது வாழ்க்கையில் ஒரு ஏற்றத்தைக் கொடுத்தது போல், விலங்கு படத்தின் […]

Continue Reading

பதவிகளால் திணறும் திமிரு நடிகர்!

தற்போது சினிமாத்துறையில் உள்ள முக்கிய சங்கங்களின், முக்கிய பொறுப்புகளுக்கு விசாலமான நடிகர் வந்திருக்கிறார். இளம் வயதிலேயே முக்கிய பொறுப்புகளுக்கு வந்திருக்கும் நடிகருக்கு ஒருபக்கம் சந்தோஷம் இருந்தாலும், மறுபக்கம் சிறு பயமும் இருக்கிறதாம். சங்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வந்திருக்கும் இந்த நடிகர் சினிமா துறையினருக்கு ஏதாவது நல்லது செய்வார் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விதான் அவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறதாம். இதனால், முக்கிய பொறுப்புகளுக்கு வரும்வரை எந்தவித டென்ஷனும் இல்லாமல் […]

Continue Reading