மிக மிக அவசரத்தில் பாட்டெழுதிய சேரன்

  பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். இப்படம் குறித்து அவர் பேசிய போது, “இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது […]

Continue Reading

இயக்குநரான தயாரிப்பாளரின் முதல் பாடல்

அமைதிப்படை-2, கங்காரு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. இதில் அரீஷ் குமார் கதாநாயகனாகவும், ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் இயக்குனர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் இ ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவணசக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெண் காவலர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் […]

Continue Reading

பெண் போலீசாருக்கு திரைப்படத்தை சமர்ப்பிக்கும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி!

மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும், பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக துரத்தித் துரத்தி தடியால் அடிக்கிறார்கள். அவ்வாறு அடிக்கக் கிளம்பிய காவலர்களில் பலர் கிராமம் அல்லது விவசாயக் குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும்! மதுக்கடை வேண்டாம் என்று மாரிலடித்து போராட்டம் நடத்தும் தாய்மாரின் கன்னத்தில் ‘பளார்…பளார்’ என பொதுமக்கள் கண்ணெதிரே அறைகிறார் போலீஸ் உயரதிகாரி ஒருவர். அவரின் சேவையைப் பாராட்டி பதவி உயர்வும் […]

Continue Reading

பிச்சைக்காரராக மாறிய பத்திரிகையாளர்

கங்காரு, அமைதிப்படை 2 படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இவர் முதன்முறையாக இயக்கும் படம் மிக மிக அவசரம். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பெண் காவலர்களின் பிரச்னைகள் குறித்துப் பேசும் படமாக உருவாகி இருக்கிறது மிக மிக அவசரம். இந்தப் படத்தில் பத்திரிகையாளர் காவேரி மாணிக்கத்தையும் நடிக்க வைத்துள்ளார் சுரேஷ் காமாட்சி. மேலை நாட்டு சினிமா இயக்குநர் ஒருவர் தன்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நபர்களை பிச்சையெடுக்க செல்ல சொல்லுவாராம். யார் அதிகமாக பிச்சையெடுத்து […]

Continue Reading

மிக மிக அவசரம் – மோசன் போஸ்டர் வெளியிடும் பாரதிராஜா

சுரேஷ் காமாட்சியின் திரைக்கதை, இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. ஸ்ரீப்ரியங்கா, ராமதாஸ், முத்துராமன், ஹரிஸ் உத்தமன், அரவிந்த், சக்தி சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனரும், தயாரிப்பாளருமான ஏ.ஆர். முருகதாஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். தற்போது இப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஏப்ரல் 24ம் தேதி மாலை 5 மணிக்கு, ஒன் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மிக மிக […]

Continue Reading

மிக மிக அவசரமாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ்!

‘அமைதிப்படை பார்ட் 2’, ‘கங்காரு’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் ‘மிக மிக அவசரம்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நாளை ஏப்ரல் 19 புதன்கிழமை காலை 10 மணிக்கு ட்விட்டரில் வெளியிடுகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் நல்ல விஷயங்களுக்கு முதல் குரல் கொடுப்பவர் என்றால் அவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியாகத்தான் இருக்கும். சுரேஷ் காமாட்சி வெறும் தயாரிப்பாளர் மட்டுமல்ல… இயக்குநரும்கூட. பங்கஜ் புரொடக்ஷன்ஸ் படங்களில் […]

Continue Reading