ஓடிடி தளத்தில் வெளியாகும் சூரரைப்போற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்படாமல் இருந்தது. தியேட்டர்கள் திறந்ததும் இப்படம் வெளியாகும் […]

Continue Reading

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘சூரரைபோற்று’ படக்குழு

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்துள்ள சூரரை போற்று படம் கொரோனா அச்சுறுத்தலால் திரைக்கு வருவதில் தாமதமாகி உள்ளது. தற்போது புதிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் ரிலீசாகி வருகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து சூர்யாவின் சூரரை போற்று படத்தை தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர். இந்தநிலையில் தற்போது சூரரை போற்று படத்தின் தணிக்கை விவரங்கள் வெளியாகி உள்ளன. படம் […]

Continue Reading

சூரரைப்போற்று படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா

சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகிவரும் “சூரரைப்போற்று” படத்தின் கதை குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு நடிகர் சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சூர்யா தற்போது ‘இறுதிச்சுற்று’ பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் “சூரரைப்போற்று” படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 38-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 70-வது படமாகும். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் வரலாற்று படம் என்று செய்திகள் வெளியானது. […]

Continue Reading

நட்புக்காக ஒரு பாட்டுக்கு ஆட்டம் போடும் ரகுல் ப்ரீத்

தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். கார்த்தியுடன் இவர் நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெற்றி பெற்றதால், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது முன்னணி கதாநாயகர்களான சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் யாருமே எதிர்பாராத நிலையில் தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட ஒப்புக்கொண்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங். பொயபட்டி சீனு இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் […]

Continue Reading

கார்த்திக்கு வெற்றிக்கோப்பை அளிக்கும் சூர்யா

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்` கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், 5 அக்காக்களாக மெளனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெறும் மாட்டுவண்டி பந்தையத்தில் […]

Continue Reading

சாதனை படைத்த சொடக்கு

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கிய இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் செந்தில், ரம்யா கிருஷ்ணன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அமைந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘சொடக்கு மேல…’ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனை […]

Continue Reading

ரகுல் ப்ரீத்துக்கு பிறகு சாய்பல்லவி

தமிழில் சாய் பல்லவி அறிமுகமாகும் முதல் படமான `தியா’ வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாய் பல்லவி தற்போது தனுஷின் `மாரி-2′ படப்பிடிப்பில் பிசியாகி இருக்கிறார். சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு அடுத்த மாதம் இரண்டாவது பாதியில் சாய் பல்லவி சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. என்ஜிகே […]

Continue Reading

பாடகியாக அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக்கும், அவருடைய மகன் கெளதம் கார்த்திக்கும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று […]

Continue Reading