அமரர் ஆனார் ஆதித்யன்

தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன். இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’ உள்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள் பிரபலமானவை. இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஏராளமான ரீமிக்ஸ் பாடல்களையும், பாப் பாடல் களையும் பாடி இருக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இவரிடம் பயிற்சி பெற்றவர். ஆதித்யன் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றார். […]

Continue Reading

பழைய கூட்டணியுடன் புதிய படத்தில் விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் `வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. எழில் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார். சூரி, ரோபோ சங்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், நிகேஷ் ராம் என காமெடி கூட்டணியில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து விஷ்ணு விஷால் – எழில் – டி.இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷ்ணு […]

Continue Reading

மீண்டும் சாயிஷாவுடன் ப்ரியா பவானி கூட்டணி

கார்த்தி நடிப்பில் `தீரன் அதிகாரம் ஒன்று’ வருகிற நவம்பர் 17-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், கார்த்தி அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து தென்காசியில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. டி இமான் இசையமைக்கும் இப்படத்தில் கார்த்தி ஜோடியாக சாயிஷா செய்கல் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில், மேயாத […]

Continue Reading

நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்!

வலுவான கதைதளத்துடனும், ஆழமான உறவுப் பின்னல்களையும் கொண்டு படம் செய்யக் கூடிய இயக்குனர் சுசீந்திரனின் மேல் நமக்கிருக்கும் அதீத எதிர்பார்ப்பை இந்த “நெஞ்சில் துளிவிருந்தால்” அசைத்துப் பார்க்கிறது. வெண்ணிலா கபடிக் குழு தொடங்கி மாவீரன் கிட்டு வரையிலாயிலான (ராஜபாட்டை நீங்கலாக) அவரது படங்கள் போலவே இதிலும் ஒரு களம் இருக்கிறது. நட்பு, குடும்பப் பாசம், மருத்துவப் படிப்பு மோசடி என வலுவான ஒரு களம் இருந்தும் இம்மூன்றில் எதை அழுத்தமாகக் கையாளலாம் என்பதில் இயக்குனருக்குக் குழப்பம் இருந்ததாகவேத் […]

Continue Reading

இப்படை வெல்லும் – விமர்சனம்

நவம்பர் பதினைந்தாம் தேதியில் தமிழகத்தில் பல முக்கியமான இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தத் திட்டமிட்டு உத்தரபிரதேச சிறையிலிருந்து தப்பிக்கும் மிக மோசமான பயங்கரவாதி. அம்மா, இரண்டு தங்கைகள் அவர்களின் நடுத்தர வர்க்கக் கனவுகளோடு சென்னையில் மென்பொருள் பொறியாளனாக இருக்கும் ஒருவன். அவன் அசிஸ்டண்ட் கமிஷ்னரின் தங்கையை காதலிக்கிறான். அந்த போலீஸ் அண்ணன் திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால், அவளை நவம்பர் பதினைந்தாம் தேதி பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். குழந்தைகளை மகிழ்விக்கும் என்பதால் குறைந்த சம்பளம் என்றாலும் கூட மன […]

Continue Reading

மன்னிப்பு கேட்ட மஞ்சிமா!

தூங்கா நகரம் இயக்குனர் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ராதிகா சரத்குமார் மற்றும் சூரி ஆகியோர் நடித்திருக்கும் படம் “இப்படை வெல்லும்”. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் நாளை(09.11.2017) உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தன்னால் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகை மஞ்சிமா மோகன். ட்விட்டரில் மஞ்சிமா மோகன் குறியிருப்பதாவது, “முதலில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு மன்னிப்புக் […]

Continue Reading