தெலுங்கு படத்தில் நடிக்க விரும்பும் தனுஷ்

`வேலையில்லா பட்டதாரி-2′ படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது `வடசென்னை’ படத்தை நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது. அதேபோல் `ஃபகீர்’ என்ற ஆங்கிலம்-பிரெஞ்சு மொழி படத்திலும் நடித்திருக்கிறார். தனுஷ் தற்போது `மாரி-2′, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனுஷ் அடுத்ததாக தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `நீடி நாடி ஒகே கதா’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. […]

Continue Reading

பேய் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்

ஐஸ்வர்யா தனுஷ் பேய் படம் ஒன்றை இயக்க உள்ளாராம். 3 படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் ஐஸ்வர்யா தனுஷ். அந்த படத்தில் தனது கணவர் தனுஷையே ஹீரோவாக நடிக்க வைத்தார். தனுஷ் நடித்ததுடன் அந்த படத்தை தயாரிக்கவும் செய்தார். 3 படம் மூலம் கோலிவுட்டுக்கு புது இயக்குனர் மட்டும் அல்ல புது இசையமைப்பாளரும் கிடைத்தார். அந்த இசையமைப்பாளர் வேறு யாரும் அல்ல சிவகார்த்திகேயனின் செல்லம் அனிருத் தான். 3 படத்தை அடுத்து கவுதம் கார்த்திக்கை வைத்து […]

Continue Reading

மாரி 2-வில் கலெக்டரான கதாநாயகி

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி-2’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் துவங்கிய நிலையில், சமீபத்தில் படக்குழு சென்னை விரைந்தது. சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். பின்னர் வரலட்சுமி இந்த படத்தில் வில்லியாக நடிப்பதாக சில செய்திகள் உலா வந்தன. வரலட்சுமி அதனை மறுத்திருந்த நிலையில், அவர் கலெக்டராக நடிப்பதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலாஜி மோகன் இயக்கும் இந்த […]

Continue Reading

கெளதம் மேனன் அறிமுகப்படுத்தும் தனுஷின் ’விசிறி’

இயக்குனர் கெளதம் மேனன் தற்போது தனுஷை வைத்து `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் யார் என்று வெளியிடாமலே இப்படத்தில் இடம் பெறும் “மறுவார்த்தை பேசாதே” என்ற பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான ‘நான் பிழைப்பேனா…’ என்ற பாடலும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. பின்னர் […]

Continue Reading

தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “எனது படங்கள் தாமதமாவதாகவும் வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் விமர்சிக்கப்படுகின்றன. சில படங்களின் கதைக்கு அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருப்பதாலும் ஒரு படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படத்துக்கு செல்ல வேண்டும் என்று நான் முடிவு செய்ததாலும் இந்த தாமதங்கள் ஏற்பட்டுவிட்டன. அடுத்த வருடத்தில் […]

Continue Reading

“நண்பேன் டா” கொண்டாட்டமாக்கிய சிம்பு-தனுஷ்!

நண்பா வா நாம் அப்பவும் இப்பவும் எப்பவும் கிங் தான்… நாமெல்லாம் யார் ஒன்றுக்குள் ஒன்றான ஒலிம்பிக் ரிங் தான்.. என பாட்டு மட்டும் தான் பாடவில்லை சிம்புவும், தனுஷும்! சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “சக்கபோடு போடு ராஜா” படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. சாதாரணமான விழாவாக நடந்திருக்க வேண்டியதை சிம்பு-தனுஷ் ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களை பரவசமாக்கினார்கள். காலங்காலமாக இருந்துவரும் எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் ரசிகர்கள் போட்டிக்கு பிறகு அடுத்த தலைமுறை ரசிகர்கள் சிம்பு-தனுஷ் […]

Continue Reading

பிப்ரவரியில் வெளியாகும் தனுஷ் படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கவுதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்’ படத்தை உருவாக்கி வருகிறார். தற்போது விக்ரம் `சாமி-2′ படத்தில் பிசியாகி இருப்பதால், தான் கிடப்பில் போட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை […]

Continue Reading