Tag: தம்பி ராமையா
விழித்திரு விமர்சனம்!
விழித்திரு. 2012 இல் ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு சூழ்நிலைகளையும் இடையூறுகளையும் கடந்து வெளிவந்திருக்கிறது. இவ்வளவு தடைக்கற்களைத் தாண்டி வந்தபின்னும் பாருங்கள், விழித்திரு மழையிடம் சிக்கிக்கொண்டது துரதிர்ஷ்டவசம் தான். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக ஒரு படத்தை எடுத்தே ஆகவேண்டும் என தீர்க்கமான ஒரு தயாரிப்பாளராக, இயக்குனராக, படைப்பாளியாக நின்ற மீரா கதிரவனின் நம்பிக்கைக்கு முதலில் வாழ்த்துகள். “அவள் பெயர் தமிழரசி” விமர்சன ரீதியில் நல்ல பெயரைத் தந்திருந்தாலும் இரண்டாவது படத்திற்கு மிகப்பெரிய இடைவெளி மீரா கதிரவனுக்கு. ஒரு இரவில் வெவ்வேறு […]
Continue Readingதம்பி ராமையாவின் உலகம் விலைக்கு வருது
மனுநீதி, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படங்களைத் தொடர்ந்து தம்பி ராமையா அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்குகிறார். தம்பி ராமையாவின் மகனான உமாபதி அறிமுகமான `அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், உமாபதியை வைத்து தானே படம் ஒன்றை இயக்க தம்பி ராமையா முடிவு செய்து அதற்கு `உலகம் விலைக்கு வருது’ என்ற தலைப்பு வைத்திருக்கிறார். மிருதுளா முரளி, ஜெயப்பிரகாஷ், சமுத்திரக்கனி, ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், விவேக் பிரசன்னா, மொட்டை ராஜேந்திரன், பவர் ஸ்டார் சீனிவாசன், […]
Continue Readingஅதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்
அப்பாவி கதாநாயகனான உமாபதி ஒரு கிதார் கலைஞர். இவர், பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் தன்னுடைய நண்பனுக்கு உதவி செய்யப்போய் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதிலிருந்து தன்னைக் காப்பாற்ற, தன்னுடைய நெருங்கிய நண்பரான கருணாகரனால் மட்டுமே முடியும் என்று எண்ணுகிறார். அவருடைய உதவியை நாடுகிறார். ஆனால் உண்மையில் பயந்தாங்கொள்ளியான கருணாகரன், கதாநாயகனான உமாபதியின் பிரச்சனையை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதே படத்தின் மீதிக்கதை. தம்பி ராமையாவின் மகனான நாயகன் உமாபதி தனது கதாபாத்திரத்திற்கு […]
Continue Readingசிவகார்த்திகேயனை சூப்பர் ஸ்டாராக்கிய விஜயின் தயாரிப்பாளர்
தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும் போது, சிவகார்த்திகேயனை “இளம் சூப்பர் […]
Continue Readingதம்பி ராமையா மகனுக்கு கைக்கொடுக்கும் சிவகார்த்திகேயன்
பிரபல இயக்குனர் மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. இப்படத்தின் மூலம் தெலுங்கில் வளர்ந்து வரும் கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் தமிழில் அறிமுகமாகிறார். நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் கருணாகரன் படம் முழுக்க வருகிறார். பாண்டிராஜன், ஆடுகளம் நரேன், மனோபாலா, யோக்ஜேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரு சாதாரண கிடார் இசை கலைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் ஒரு வித்தியாசமான சம்பவமும் அது தொடர்பான பல திருப்பங்களும் […]
Continue Reading