மெர்சல் – விமர்சனம்!

தடைகளைத் தகர்த்தெறிந்து விட்டு வந்து, அள்ளு சில்லு சிதறவிட்டிருக்கிறது இந்த மெர்சல்!! அட்லி,  சினிமா என்னும் கலையை தனக்கான அரசியலைப் பேசுவதற்கோ அல்லது தனது சித்தாந்த கருத்துக்களை மக்களிடத்திடத்தில் சேர்ப்பதற்கோ படமெடுப்பதில்லை என்று திடமாக நம்பலாம்.. ஆனால், அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப எந்தமாதிரியான  அரசியலைப் பேசினால் ரசிகன் குதூகலமாவான் கைதட்டுவான் என்பதை மிகச் சரியாகப் புரிந்து வைத்துக்கொண்டும்… கதைக்குள் அந்த அரசியலை கமெர்சியலாகக் கையாண்டும் வசூல் செய்யத் தெரிந்த ட்ரேட்மார்க் கமெர்சியல் ஃபிலிம் மேக்கர்… அட்லி எந்தெந்த […]

Continue Reading

தளபதியை வளர்த்தெடுக்கும் பிரச்சனைகள்!

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கிற நடிகர் விஜயின் படங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் இருக்கிறத் ”தீராதக் காதல்” தொடர்ந்து கொண்டே இருக்கிறது “மெர்சல்” வரை..நேரடியாகவோ மறைமுகமாகவோ விஜயின் படங்கள் பிரச்சனைகளை சந்திப்பதென்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது, எப்படியெனில் பிரச்சனைகள் ஏதும் இல்லாமல் படம் வெளியாகிவிட்டால் பலர் ஆச்சர்யப்பட்டு பேசுமளவிற்கு ஆகிவிட்டது… “படம் எடுப்பதில் இருக்கிற சிரமத்தை விட அதை எந்த சிக்கலும் இல்லாமல் வெளிவிட வேண்டும் என்பதே பெரிய சிரமமான ஒன்றாக இருக்கிறது” என்று விஜயையே பேச வைத்துவிட்டார்கள் நம்மவர்கள்…அழகிய […]

Continue Reading

அட்லி சொன்ன மெர்சல் ரகசியங்கள்

அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் 100-வது படமாக உருவாகியுள்ளது. இப்படம் குறித்து அட்லி பேசும் போது, “அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் ஒரு பிரச்சனையை ‘மெர்சல்’ படத்தில் தொட்டு இருக்கிறோம். மதுரையை சேர்ந்த தளபதி என்ற பாத்திரத்தில் அப்பா விஜய் ரகளையாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக நித்யாமேனன் நடிக்கிறார். இன்னொரு விஜய் மேஜிக் செய்பவர். இந்த வேடத்துக்காக மேஜிக் கற்றார். இந்த படத்தில் அப்பா, […]

Continue Reading

மெர்சல் ரகசியத்தைப் போட்டுடைத்த காஜல்

அட்லி இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வருகிறது `மெர்சல்’. விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கேளிக்கை வரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் […]

Continue Reading

ரகுல் ப்ரீத் சிங்குக்கு அடித்த ஜாக்பாட்

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறதாக்க’ படங்களில் நடித்து, தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு பக்கம் போனவர் ரகுல் ப்ரீத் சிங். அங்கு முன்னணி நாயகியாக வலம் வரும் அவர், ‘ஸ்பைடர்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். தற்போது கார்த்தியுடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருடைய ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருக்கிறார். தொடர்ந்து ரஜத் இயக்கத்திலும் கார்த்தி நடிக்க […]

Continue Reading

ஐகோர்ட் உத்தரவால் உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்

அட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள மெர்சல் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு இடையே நேற்று வெளியான இப்படத்தின் டீசர் சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்க்கப்பட்டு புதிய சாதனை படைத்தது. மெர்சலுக்காக ட்விட்டரில் எமோஜி பெற்றது, இப்படத்தின் தலைப்புக்கு டிரேட் மார்க் வாங்கியது உள்ளிட்டவை, தென்னிந்திய சினிமாவிலேயே இதுவரை யாரும் செய்திடாத ஒன்று. முதன்முதலாக அந்தப் […]

Continue Reading

பிரம்மாண்ட திரையரங்கில் தடம் பதிக்கும் விஜய்

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் இணைந்து நடித்து வரும் படம் `மெர்சல்’. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் மெர்சல் படத்தின் டீசர் உலகளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. படத்தை விளம்பரப்படுத்த தயாரிப்பு நிறுவனம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், படத்தின் வியாபாரமும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், […]

Continue Reading