ஒரு ஊரில் அழகே உருவாய் – கௌதமின் தேவதைகள்!

கௌதம் வாசுதேவ் மேனன், தமிழ் சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்பதை விட இந்திய சினிமாவின் ரசனைமிகு இயக்குனர் என்று சொன்னால் மிகப்பொருத்தமாக இருக்கும். கதாநாயகன் தொடங்கி காமெடியன், வில்லன் வரை அனைவருமே அழகாகவே இருப்பார்கள் கௌதமின் படத்தில். அவர்கள் அணிந்திருக்கும் ஆடை அழுக்கானதாக இருந்தால் கூட அதில் ஒரு நேர்த்தி மிளிரும். கௌதமின் கதாபாத்திரம் அனைத்துமே ஆங்கிலம் கலந்து பேசுவது நமக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் அது உறுத்தாது. அவரின் படங்களில், ஒவ்வொரு காட்சியிலுமே ஒரு ஓவியத் […]

Continue Reading

ஔரங்கசீப் கோட்டையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா, 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்துள்ள சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. மேலும் `மோகினி’, `கர்ஜனை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ள த்ரிஷா, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் `1818′ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்திலும், […]

Continue Reading

வாட்ஸ்-அப்பில் வைரலாகும் த்ரிஷாவின் குறும்படம்

தட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல தமிழ் நடிகை த்ரிஷா பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். கேரள அரசும், யூனிசெப் அமைப்பும் இணைந்து நேற்று ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் நடிகை த்ரிஷா, தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த படத்தில் த்ரிஷாவின் நடிப்பும், பேச்சும் கேரள மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் த்ரிஷாவின் தட்டம்மை விழிப்புணர்வு குறும்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது. […]

Continue Reading

புது வரலாறாக ‘மெட்ராஸ்’ கவிஞர் உமாதேவி!

தமிழ் திரைப்பாடல் உலகில் மிக முக்கியமான ஆளுமையாக, திறமையான பாடலாசிரியராக தனிப்பாதையில் பயணிப்பவர், கவிஞர் உமாதேவி. ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘நான், நீ, நாம் வாழவே’ பாடல் உமாதேவிக்கு சிறப்பான அறிமுகத்தை தந்தது. அதன்பின், ‘கபாலி’ திரைப்படத்தில் உமாதேவி எழுதிய ‘மாயநதி’ மற்றும் ‘வீரத்துரந்தரா’ பாடல்கள் உமாதேவியின் எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகளாய் அமைந்தன. இப்போது, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கதாநாயகிகளான, த்ரிஷா, ஜோதிகா, நயன்தாரா மூவருடன் கைகோர்த்திருக்கிறார், உமாதேவி. த்ரிஷா, விஜயசேதுபதி நடிக்கும் ‘96’, ஜோதிகா […]

Continue Reading

‘96’ல் இருக்கும் மூணு ஆறு?

விஜய் சேதுபதி – மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான `விக்ரம் வேதா’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக விஜய் சேதுபதி `96′ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். ஜனகராஜ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், வினோதினி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இந்த படத்தை இயக்குகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். படத்தின் முதற்கட்ட […]

Continue Reading

300 துணை நடிகர்கள் நடுவில் விஜய் சேதுபதி – திரிஷா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலியட்’, விஷால் நடித்த ‘கத்திசண்டை’ போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால், தற்போது விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் ‘96’ என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் காளிவெங்கட் வினோதினி நடிக்கிறார்கள். பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார், இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த […]

Continue Reading

மோஷன் போஸ்டருக்கு எகிரும் எதிர்பார்ப்பு

நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளிவந்த ‘சதுரங்கவேட்டை’ திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததை அடுத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது விறுவிறுப்பாக உருவாக்கி வருகிறார்கள். முந்தைய பாகத்தை தயாரித்த நடிகர் மனோபாலா இப்படத்தையும் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தை இயக்கிய வினோத் இப்படத்திற்கு திரைக்கதை எழுத, நிர்மல் குமார் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரியாகி வில்லனாக நடித்து வந்த அரவிந்த்சாமி இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மாறியிருக்கிறார். த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி, நாசர், […]

Continue Reading