2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்க வாருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

8-8-1942 அன்று பம்பாய் நகரில் (தற்போதைய மும்பையில்) கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ’வெள்ளையனே வெளியேறு’ (Quit India) என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. அன்று மாலை பம்பாயில் உள்ள கோவாலிய டேங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி, வன்முறை தவிர்த்து ஒத்துழையாமை செய்ததைப் போல, வெள்ளையனே வெளியேறு போராட்டமும் அமைதியான அறவழியில் நடைபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எனினும், காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். புனேவில் உள்ள ஆகா கான் […]

Continue Reading

பாரதீய ஜனதா ஆதரவுடன் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்பு

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத்துடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, பீகார் முதல்-மந்திரி பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து மீண்டும் ஆட்சி அமைக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து காட்சிகள் வேகமாக அரங்கேறின. நிதிஷ்குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர் சுஷில்குமார் மோடி நேற்று மாலை கவர்னர் மாளிகைக்குச் சென்று கவர்னர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, நிதிஷ்குமார் புதிய அரசு […]

Continue Reading

அப்துல் கலாம் மணிமண்டபம் திறக்க நாளை பிரதமர் வருகை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தைப் பிரதமர் நரேந்திர மோடி […]

Continue Reading

பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் முதன்முறையாக உரையாற்றிய அவர், “மிகவும் எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள நான் நெடுந்தூரப் பயணத்துக்கு பின்னர் எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியை மிகவும் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். இந்த நாட்டின் மக்களைத்தான் எனக்கு இருக்கும் பலமாக கருதுகிறேன். இந்த பாராளுமன்றத்தில் நான் உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் மற்ற […]

Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி, இந்திய அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக விளங்கி ஜனநாயக மாண்புகளை மேம்படுத்துபவர் என்றும், அந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறி இருக்கிறார். இதேபோல் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி பதவி காலம் சிறப்பாக அமைய […]

Continue Reading

பா.ஜ.க. துணை ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிப்பு

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வருகிற 17-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமாருக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதே போல துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந்தேதி முடிவடைகிறது. புதிய துணை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ந்தேதி நடக்கிறது. துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை ஆளும் கட்சியான […]

Continue Reading

ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமாருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு

ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயாக கூட்டணியின் சார்பில் ராம்நாத்கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமார் அறிவிக்கப்பட்டதும் அவருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது. […]

Continue Reading

ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த், பாஜக அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் அனைத்து கட்சிகளிடமும் பேசி ஒருமித்த கருத்து ஏற்படுத்தவும், தங்களுக்கு ஆதரவு திரட்டவும் பா.ஜ.க.வில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகிய 3 பேரை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த மூவர் குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட அனைவரிடமும் பேச்சு நடத்தினார்கள். மாநில கட்சித் தலைவர்களையும் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த ஆலோசனைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன. இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற்றது. […]

Continue Reading