எந்திரன் உருவாக்க எகிருது பட்ஜெட்

ரஜினிகாந்த் நடிப்பில் ‌சங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் பிரம்மாண்டமாக எடுக்கின்றனர். படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடிக்க படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்குவதில் சில சிக்கல்கள் நீடிப்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் 100 கோடி வரை உயரும் நிலை உருவாகி உள்ளது. படத்தை எடுத்தபோது கிராபிக்ஸ் […]

Continue Reading

மதுரையில் ரஜினி பட சூட்டிங்

‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் அனிருத். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதி ஆகி இருக்கிறது. மேலும் சிலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ரஜினியின் மகன்களாக பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கின்றனர். இதில் சனந்த் ரெட்டியின் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும்’ தோட்டாவில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ள மேகா ஆகாஷ் நடிக்கிறார். ரஜினிக்கு […]

Continue Reading

தள்ளிப்போகும் எந்திரன் 2.0, ஏமாற்றத்தில் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய `காலா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிசியாகியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை டார்ஜிலிங்கில் துவங்கிய நிலையில், படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 2.0 படம் வருகிற ஆகஸ்டில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போக உள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் […]

Continue Reading

காலா விமர்சனம்!

ராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு ராவணனை கொண்டாடுவதற்கு பெரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் பா.இரஞ்சித்.. ரஜினியை ஆராதிக்கிற ஒரு கூட்டம்.. அரசியல் அரங்கில் அவருக்கு எதிராய் நிற்கும் ஒரு கூட்டம்.. தன்னை நேசித்துக் கொண்டாடுகிற ஒரு கூட்டம்.. தான் முன்வைக்கும் அரசியல் மீது வெறுப்பு கொண்டு, தனக்கு எதிராக நிற்கும் ஒரு கூட்டம்.. இந்தியாவின் உச்ச நடிகர் ஒருவரை இரண்டாம் முறையாக இயக்குவதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டே ஆகவேண்டும் என்கிற அழுத்தம் என, இத்தனைக்கும் […]

Continue Reading

ரஜினியின் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா

ரஜினி நடிப்பில் `காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. காலா படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரஜினி, தனுஷ், ரஞ்சித் உள்ளிட்டோர் ஐதராபாத் சென்றிருந்தனர். ஜுன் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுவரை வயதான தோற்றத்தில் வலம் வந்த ரஜினி நேற்று ஐதராபாத் நிகழ்ச்சியில் கருப்பு முடி, தாடியுடன் வந்தார். அடுத்த படத்திற்காக ரஜினி […]

Continue Reading