12.12.1950 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஜியோஸ்டார்  நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் 12 12 1950. டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கபாலி செல்வா மற்றும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.   வா மச்சானே, டசக்கு டசக்கு போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை தொடர்ந்து இந்த 12 12 1950 படத்தில் 3 பாடல்களை எழுதியிருக்கிறேன். செல்வா […]

Continue Reading

கன்னட குயினுக்கு கால்ஷீட் இல்லை : எமி

தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இப்படத்தைத் தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது எமி ஜாக்சன், ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது ‘சூப்பர் கேர்ள்ஸ்’ என்ற ஹாலிவுட் டிவி ஷோவில் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். மேலும் ஒரு ஹாலிவுட் படத்திலும் நடிக்கிறார். இது தவிர […]

Continue Reading

பா.இரஞ்சித்தின் அடுத்த முயற்சி!

இயக்குனர் பா.இரஞ்சித், தனது அனைத்து படங்களிலும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும், அவர்களுக்கான அரசியலையும் வலுவாக பேசக்கூடியவர். திரைப்படங்களில் கருத்துக்களைப் பேசுவதோடு நின்று விடாமல் களத்திலும் சமூக மாற்றத்திற்கான அவசியத்தை முன்னிறுத்தி பல ஒருங்கிணைப்புகளையும், சாதி ஒழிப்பிற்கான பல விவாதங்களையும் நடத்திக் கொண்டிருப்பவர். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து “காலா” படத்தை எடுத்து வந்தாலும், இடையிடையே சமூகம் சார்ந்த தனது செயல்பாடுகளையும் தொய்வில்லாமல் தொடர்ந்தவண்ணம் உள்ளார். அந்த வகையில், தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” மற்றும் […]

Continue Reading

துபாய் அரசர் கலந்து கொள்ளும் 2.0 இசை வெளியீட்டு நிகழ்ச்சி!

2.0 இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட நிகழ்வுகள்: லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகஉருவாகியிருக்கும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது. 2.0 படக்குழுவினர் மேலும் இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், […]

Continue Reading

எந்திரன் இசை விழாவில் ஏ ஆரின் கச்சேரி

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் `2.0′ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவின் போது ஏ ஆர் ரஹ்மான் இசை கச்சேரியும் இடம்பெறுவதாக இயக்குநர் […]

Continue Reading

கடினமான முடிவை எடுத்த அமீர்கான்

சங்கர் இயக்கத்தில் ரஜினி, எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் நடித்துள்ள படம்‘2.0’. லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் முதலில் தன்னைத்தான் ரஜினிக்கு பதில் ஹீரோவாக நடிக்கச் சொன்னதாக இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், ”நான் ‌சங்கர் சார், ரஜினி சாரின் மிகப்பெரிய ரசிகன். ‘2.0’ படம் எடுக்க முடிவு செய்ததும் என்னை இந்த படத்தில் ஹீரோ பாத்திரத்தில் நடிக்கும் படி ‌சங்கர் அழைத்தார். தனது […]

Continue Reading

இயக்குனர் ஷங்கருடைய உதவி இயக்குனரின் குமுறல்!

பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் ஷங்கரிடம் பணிபுரியும் உதவி இயக்குனர் ஒருவரின் குமுறல் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முரளி மனோகர் என்கிற அந்த உதவி இயக்குனர், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது.. ”இனி காத்திருப்பதில் அர்த்தமேயில்லை. #2.0க்காக கடந்த டிசம்பரிலிருந்து டப்பிங்கின் முழுப் பொறுப்பேற்று நான், வேலை செய்து வருவது ஊடகவியலாளர்கள், தோழர்கள் அனைவருக்கும் தெரியும். டப்பிங்கின் போது ரஜினி சார் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதும் செய்தியானது. செய்திக்காக எதையும் பரப்புவனல்ல நான். பொறுத்துப் […]

Continue Reading

காலா ரிலீஸ் குறித்து அறிவித்த பா ரஞ்சித்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்கிறார். ‘காலா’ படத்திலும் ரஜினி வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகைகள் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி […]

Continue Reading

கமலுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியா

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியா பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “இன்றைய சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய விரும்புகிறேன். அதற்கு என்னை முதலில் தயார் செய்து கொள்கிறேன். நல்லது செய்ய வேண்டும் என்பது என் ஆத்ம திருப்திக்காக தான். மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று நான் கவலைப்பட்டதில்லை. அரசியல் என்பது காமெடியான வி‌ஷயம் அல்ல. அது ஒரு சேவை. சேவை செய்ய அரசியல் மிகப்பெரிய அடித்தளம். […]

Continue Reading

ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகை ட்வீட்

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் ஈடுபடுவது குறித்து நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஸ்ரீப்ரியா தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு டெலிவிஷன் சேனல்களிலும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவதைப் பற்றியே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. அவர்களால் ஏன் நல்லதொரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டு வர முடியாது? ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நிச்சயம் அரசியலுக்கு வர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீப்ரியாவிடம் ரசிகர் ஒருவர், “போன தடவை 1000 ரூபாய் […]

Continue Reading