காண்டான தயாரிப்பாளர் சங்கம்.. சிக்கலில் சிம்பு, வடிவேலு, திரிஷா..

சமீபத்தில் “அண்ணாதுரை” பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞான வேல் ராஜா, “தயாரிப்பாளர் சங்கத்துக்கு 3 புகார்கள் வந்துள்ளன, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்திய அந்த நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று பூடகமாக தெரிவித்திருந்தார். அனைவரும் அப்போதே அது சிம்பு, வடிவேலு தான் என்று யூகிக்க ஆரம்பித்தனர். இப்போது அந்த யூகம் சரிதான் என்று நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால் சிம்பு, வடிவேலுவோடு நடிகை த்ரிஷாவையும் கட்டம் கட்டியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். கோடிக்கணக்கில் […]

Continue Reading

கருணாநிதியுடன் மு க அழகிரி சந்திப்பு

நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் – தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த […]

Continue Reading

கோபாலபுரத்தில் கல்யாண வைபோகம்

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கோபாலபுரத்தில் கருணாநிதி முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. மணமக்களை, கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வாதம் வழங்கினார். இவ்விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, மணமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கலைஞர் அவர்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது […]

Continue Reading

சாமி2.. டாட்டா காட்டிய திரிஷா!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் திரிஷா நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ”சாமி”. பதினான்கு ஆண்டுகள் கழித்து தயாராகும் சாமி படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. இதில் மீண்டும் விக்ரமுடன் நடிக்க திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். படத்தில் கூடவே கீர்த்தி சுரேசும் ஒப்ப்ந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், படத்திலிருந்து விலகிக் கொள்வதாக நடிகை திரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார். அதில் திரிஷா கூறியிருப்பதாவது, ”கதையின் மாறுதல்களால், இந்தப் படத்திலிருந்து விலகுவதாக […]

Continue Reading

விக்ரம் மகனுக்கு ஜோடியாக கமல் மகள்?

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் `அர்ஜுன் ரெட்டி’. தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பால் இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நாயகனாக துருவ் விக்ரம், இயக்குனராக பாலா என இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எதிர்பார்ப்பை […]

Continue Reading

விக்ரமுடன் மோதும் சிவகார்த்திகேயன்!

நடிகர் “சீயான்” விக்ரமுடன் தமன்னா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள “ஸ்கெட்ச்” திரைப்படத்தின் டீசரை தீபாவளிக்கு வெளியாகுமென்று அறிவித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, ”வாலு” படத்தை இயக்கிய விஜய் சந்தர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ”ஸ்கெட்ச்” படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை நவம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்தை டிசம்பர் மாதத்தில் கிருஸ்துமஸ் விருந்தாக திரைக்குக் கொண்டு வர வேகமாக உழைத்து வருகிறது படக்குழு. கிறிஸ்துமஸ் திங்கட்கிழமை 25ஆம் தேதி வருகிறது. எனவே அதற்கு […]

Continue Reading

தீபாவளிக்கு விக்ரமின் குட்டி ஸ்கெட்ச்

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் – தமன்னா இணைந்து நடித்திருக்கும் படம் `ஸ்கெட்ச்’. வடசென்னையைப் பின்னணியாகக் கொண்டு ஆக்‌ஷன் கலந்த ஸ்டைலிஷ் படமாக உருவாகியிருக்கும் இது விக்ரமின் 53-வது படமாகும். இப்படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடித்திருக்கிறார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் தீபாவளி தினமான அக்டோபர் 18ம் தேதி வெளியாகும் என்று […]

Continue Reading

விக்ரம் படத்தில் முன்னணி நடிகர்கள்

அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் விக்ரம் தற்போது, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே செப்டம்பர் 15 முதல் தொடங்கப்படும் ‘சாமி-2’ படத்திலும் நடிக்க இருக்கிறார். ஹரி இயக்கும் இப்படத்தில் விக்ரம் ஜோடியாக த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். பாபி சிம்ஹா வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு மற்றும் சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் […]

Continue Reading

பிரமாண்ட செட் போட்டு ஸ்கெட்ச் பாட்டு

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிகப் பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். இசை – எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு – சுகுமார், பாடல்கள் – கபிலன், விவேக், விஜய்சந்தர், கலை […]

Continue Reading