மகளிர் மட்டும் – விமர்சனம்

குற்றம் கடிதல் பட இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’. சில நாட்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் முற்போக்கு சிந்தனை கொண்ட ஆவணப்பட இயக்குநரான பெண், தன்னுடைய மாமியாரின் கல்லூரி வாழ்க்கை பற்றியும், அவரது தோழிகள் பற்றியும் தெரிந்து கொள்கிறார். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்து விட்ட அவர்களை மீண்டும் சந்திக்க வைத்து, வீட்டுச் சிறையில் இருந்து மீட்டு ஜாலி டூர் போகிறார்கள். […]

Continue Reading

துப்பறிவாளன் – விமர்சனம்

மிஷ்கின் இயக்கத்தில், விஷால், பாக்யராஜ், அனு இமானுவேல், பிரசன்னா, வினய் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘துப்பறிவாளன்’. எதையும் தன் அறிவாற்றலால் திறமையாக துப்பறிந்து விடும் விஷாலுக்கு, அவருடைய திறமைக்கு தீனி போடும் அளவுக்கான எந்த ஒரு வழக்கும் சிக்காமல் இருக்கிறது. அப்போது சிறுவன் ஒருவன் தன்னுடைய நாய்க்குட்டியை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாகவும், அவனைக் கண்டுபிடித்து தருமாறும் விஷாலிடம் கேட்கிறான். இதனை ஏற்றுக் கொண்ட விஷால் அது குறித்து துப்பறியும் போது, பல […]

Continue Reading

நெருப்புடா – விமர்சனம்

விக்ரம்பிரபுவின் முதல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ‘நெருப்புடா’. உயிரை துச்சமென மதித்து, துணிச்சலுடன் செயல்பட்டு, தீவிபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களை பார்த்து, சிறுவயதில் இருந்தே தீயணைப்பு வீரராக வேண்டும் கனவோடு இருந்து வருகிறார்கள் விக்ரம் பிரபுவும், அவரது நான்கு நண்பர்களும். தீயணைப்புத் துறையில் சேர்வதற்கு முன்பாகவே, சொந்தமாக ஒரு தீயணைப்பு வண்டியை வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் […]

Continue Reading

விவேகம் – விமர்சனம்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் குமார், சிறுத்தை சிவா, வெற்றி ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் விவேகம். சர்வதேச உளவு போலீஸில் உயர்பதவியில் பணிபுரிந்து வருகிறார்கள் நண்பர்களான அஜித்தும், விவேக் ஓபராயும். பணத்தாசை கொண்ட விவேக் ஓபராய், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியாவை அழிக்க நினைக்கும் சர்வதேச சதிகாரர்களின் செயல்களுக்கு துணை போகிறார். இதை அறிந்து கொண்ட அஜித், சதிகாரர்களின் திட்டத்தை முறியடித்து, இந்தியாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. சதிகாரர்களிடமிருந்து […]

Continue Reading

தரமணி – விமர்சனம்

ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அழகம் பெருமாள், அஞ்சலி நடிப்புல, கற்றது தமிழ் ராம் இயக்கத்துல உருவாகியிருக்க படம் ‘தரமணி’. கிரிக்கெட் மேட்ச்ல இந்தியா ஜெயிச்சா… பொண்டாட்டி நடத்தைய சந்தேகப்பட்டு டார்ச்சர் பண்ணுற புருஷன் திருந்தி வாழ்வானா மாட்டானா… இது படத்தோட ஒன்லைன். அது எப்படி மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும முடிச்சுப் போட முடியும், இம்பாசிபுல்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. ஆனா ஐ ஆம் பாசிபுல்னு, சக்சஸ்புல்லா முடிச்சு (போட்டு) காமிச்சிருக்காரு டைரக்டர் ராம். காதலியால் ஏமாற்றப்பட்ட […]

Continue Reading

பொதுவாக எம்மனசு தங்கம் – விமர்சனம்

கூத்தப்பாடி கிராமத்தில் வசிக்கும் உதயநிதி ஸ்டாலின், வேலை ஏதும் செய்யாமல், தன் ஊருக்கு நல்லது செய்துக் கொண்டு, தேவையான வசதிகளை செய்து வருகிறார். பக்கத்து ஊரைச் சேர்ந்த பார்த்திபன் ஒரு புகழ்ச்சிப் பிரியர். அவரது தங்கையை கல்யாணம் செய்துகொண்டவரின் ஊருக்கு ஏகப்பட்ட வசதிகளைச் செய்துகொடுத்திருப்பதைப் பார்க்கும் உதயநிதி, தன் ஊருக்கும் அதுபோன்ற வசதிகள் வேண்டுமென்பதற்காக பார்த்திபனின் மகளான நிவேதா பெத்துராஜை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், உதயநிதிக்கு நல்ல பெயர் கிடைப்பதால், கடுப்பாகும் பார்த்திபன், அவரின் காதலுக்கு எதிராகச் […]

Continue Reading

எந்த நேரத்திலும் – விமர்சனம்

நாயகன் ராம கிருஷ்ணன் ஊட்டியில் தன் அப்பா, மற்றும் அக்கா சான்ட்ரா எமி, மாமா யஷ்மித், இவர்களின் குழந்தை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரில் இருக்கும் நாயகி லீமா பாபுவை பார்த்தவுடன் காதல் வயப்பட்டு, காதலை சொல்லி இருவரும் காதலித்து வருகிறார்கள். தன்னுடைய காதல் விஷயத்தை அக்கா சான்ட்ரா எமியிடம் சொல்லுகிறார் ராம கிருஷ்ணன். இவரின் காதலுக்கு ஓ.கே சொன்ன சான்ட்ரா எமி, பின்னர் லீமா பாபுவை பார்த்தவுடன் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். மேலும் சான்ட்ராவின் […]

Continue Reading

வனமகன் – விமர்சனம்

பணக்கார பெண்ணான கதாநாயகி சாயிஷா, தன்னுடைய தந்தை இறப்பிற்கு பின் தந்தையின் நண்பரான பிரகாஷ் ராஜ் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஒருமுறை அந்தமான் தீவிற்கு தன் நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார் சாயிஷா. சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் காட்டுவாசியான கதாநாயகன் ஜெயம் ரவி சிக்குகிறார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட, அங்கு ஜெயம் ரவி செய்த அட்டகாசத்தால் மருத்துவமனை நிர்வாகம் கதாநாயகியின் வீட்டிற்கே […]

Continue Reading

முன்னோடி – விமர்சனம்

வீட்டுக்கு அடங்காமல் ஊர் சுற்றும் நாயகன் ஹரிஷ், உள்ளூர் தாதாவான அர்ஜுனாவின் உயிரை காப்பாற்றுவதால், அவருடனேயே இருந்து அடியாள் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி மாணவியான நாயகி யாமினி பாஸ்கரை பார்த்ததும் காதல் வலையில் விழுகிறார். இதற்கிடையில், தாதா அர்ஜுனாவின் மைத்துனருக்கு ஹரிஷை பிடிக்காமல் போகவே, ஹரிஷையும், அர்ஜுனாவையும் பிரிக்க நினைக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரிஷ், தனது தாய் மற்றும் தம்பி மீது பாசம் ஏற்பட்டு அவர்களுக்காக வாழத் தொடங்குகிறார். இதனால், தாதாவை விட்டும் விலகும் […]

Continue Reading

போங்கு – விமர்சனம்

சென்னையில் தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழில் செய்து வருகிறார் நட்டி. இவருக்கு மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா வைத்திருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்கிறார் நட்டி. இறுதியில் நட்டி 10 கார்களை திருடினாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் மாட்டினாரா? கார் திருட்டு தொழிலில் நட்டி ஈடுபட்டதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. ‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி […]

Continue Reading