தெலுங்கில் பாட்டெழுதிய மதன்கார்க்கி

தமிழ் சினிமாவில் வசன எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை உடையவர்களுள் ஒருவர் மதன் கார்க்கி. தமிழில் பல்வேறு படங்களில், பல்வேறு பாடல்களை எழுதியிருக்கும் மதன் கார்க்கி, முதன்முறையாக தெலுங்கில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் `ஸ்பைடர்’ படத்தின் தெலுங்கு பதிப்பில் மதன் கார்க்கி ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதேநேரத்தில் `ஸ்பைடர்’ படத்தின் தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி எழுத்தில் […]

Continue Reading

கருப்பு ராஜா வெள்ளை ராஜாவும் தனித்தனியா வர்றாங்களா?

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்க ஒப்பந்தமான படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படப்பிடிப்புக்கு முன்பே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியது. படத்தின் பாடலுக்காக பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிநாடு சென்றிருந்தனர். மேலும் 4 பாடல்களும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு காரணங்கள் ஏதுமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக புதிய […]

Continue Reading

வனமகன் – விமர்சனம்

பணக்கார பெண்ணான கதாநாயகி சாயிஷா, தன்னுடைய தந்தை இறப்பிற்கு பின் தந்தையின் நண்பரான பிரகாஷ் ராஜ் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். ஒருமுறை அந்தமான் தீவிற்கு தன் நண்பர்களுடன் சுற்றுலா செல்கிறார் சாயிஷா. சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தில் காட்டுவாசியான கதாநாயகன் ஜெயம் ரவி சிக்குகிறார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட, அங்கு ஜெயம் ரவி செய்த அட்டகாசத்தால் மருத்துவமனை நிர்வாகம் கதாநாயகியின் வீட்டிற்கே […]

Continue Reading

சினிமா வேலை நிறுத்தம், ஜெயம் ரவி படத்துக்கு பிரச்சினையா?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி – சாயிஷா சேகல் இணைந்து நடித்துள்ள படம் `வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டுவாசியாக நடித்திருக்கிறார். திங்க் பிக் ஸ்டுடியோ மற்றும் கோனா பிலிம் கார்ப்போரேஷன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், வருண், பிரகாஷ் ராஜ், தம்பிராமையா, சாம் பால், வேல ராமமூர்த்தி, சஞ்சய் பாரதி, ரம்யா சுப்ரமணியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் 50-வது படமான `வனமகன்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் […]

Continue Reading

கருப்பு ராஜா வெள்ளை ராஜாவுக்கு எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷாலும், கார்த்தியும் கைகோர்த்திருக்கும் படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். கதாநாயகியாக ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ள சாயிஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகர் ஆர்யாவும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான அருண்பாண்டியன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் கதைக்கு பிரபுதேவா […]

Continue Reading

பேசும்படியான பேசாத கதாபாத்திரம்!!

காடு மற்றும் காட்டு மனிதர்களை பின்னணியாக வைத்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படம் ‘வனமகன்’. இப்படத்தில் ஜெயம் ரவி காட்டில் வசிக்கும் இளைஞராக நடித்துள்ளார். சாயிஷா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு வசனங்களே இல்லாமல், முழுக்க முழுக்க சைகையிலேயே பேசி நடித்திருக்கிறாராம். அவர் இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தின் கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கும் […]

Continue Reading