இயக்குநருக்கு சவால் விட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்

எய்ட்ஸ் நோயால் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் கதாநாயகியாக நடித்து அருவி படம் தயாராகி உள்ளது. திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் இந்த படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் டெலிவிஷனில் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற பெயரில் விமர்சிக்கப்பட்டுள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் லட்சுமி கோபால்சாமி நடித்து இருந்தார். பாதிக்கப்பட்டவர்களை லட்சுமி கோபால்சாமி விளம்பரத்துக்காக கோபமூட்டி சண்டையிட வைப்பது, அழுவதற்காக கண்ணில் ‘கிளிசரின்’ […]

Continue Reading

ரஜினியின் கண்களில் அருவி

“அருவி” திரைப்படம் கடந்த வெள்ளிகிழமை வெளியாகி உலகமெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. SPI சினிமாஸ் திரையரங்கில் முதலில் SERENE மற்றும் 6Degrees போன்ற ஸ்க்ரீன்களில் திரையிடப்பட்ட அருவி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதையெடுத்து தற்போது சத்யம் ஸ்க்ரீனில் திரையிடப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் கூட மாலை நேரத்தில் அனைவரும் குடும்பத்தோடு வந்து “அருவி” திரைப்படத்தை கண்டு ரசித்து செல்கிறார்கள். இன்று அருவி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குநர் […]

Continue Reading

அருவி – விமர்சனம்!

மலைமுகட்டின் மேலிருந்து பிரவாகமெடுக்கிற நீர்த்திரள்கள் இணைந்து இருப்பிடம் தேடி சரிந்து விழும். அது தான் அருவியின் ஆரம்பம்!. அத்தோடு நின்றுவிடுவதில்லை அந்த அருவி. அது பயணிக்கிற இடமெல்லாம் பசுமையை இரைத்துப் போகிறது, தன் ஈரம் மிச்சமிருக்கிற கடைசி தடம் வரையிலும். அப்படித் தான் இந்த அருவியும் உணர்வுகளின் திரளாய், தான் பயணிக்கிற இடமெங்கிலும் அன்பை விதைத்துப் போகிறாள். உயிர் வாழ்கிற கடைசி நொடி வரையிலும்! பொதுவாகவே இந்த சமூகம் பெண்கள் மீதான அடக்குமுறைகள் குறித்து எப்போதுமே விவாதிக்க […]

Continue Reading

பெண்களை சந்திக்க ஆடிசனா? : எஸ் ஆர் பிரபு

அருவி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர்கள் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு , இயக்குநர் அருண் பிரபு, நாயகி அதீதி பாலன் , இசையமைப்பாளர் வேதாந்த், ஒளிப்பதிவாளர் ஷெல்லி , படத்தொகுப்பாளர் ரேமன்ட், கலை இயக்குநர் சிட்டிபாபு, நடிகர்கள் ஸ்வேதா சேகர், அஞ்சலி வரதன், மதன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் S.R.பிரபு பேசிய போது, “இதுவரை நாங்கள் தயாரித்த திரைப்படங்களில் மிகச்சிறந்த படம் இது தான். […]

Continue Reading