மலேசியாவில் பரவசமான தேவி ஸ்ரீபிரசாத்

விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், […]

Continue Reading

மீனவர்கள் நலனில் அக்கறை காட்டும் இசையமைப்பாளர்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட ஐநூறு மீனவர்கள் மற்றும் விவசாய மக்களுக்கு உதவுவதற்காக முதன்முதலில் கிரௌட் பண்ட் என்ற முறையில் நிதி திரட்டப்படுகிறது. இதற்கான முயற்சியை இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ வி பிரகாஷ்குமார் தொடங்கிவைத்தார். எதுதர்மா (Edudharma) என்ற பெயரில் இயங்கும் வலைதள முகவரி மூலமாக இந்த நிதி திரட்டுப்பட்டு வருகிறது. இது குறித்து ஜீ வி பிரகாஷ் குமாரின் நண்பரும் சமூக சேவகருமான குணசேகரன் பேசும் போது, ‘தமிழகத்தின் தென் பகுதியை அண்மையில் வீசிய ஓகி புயலால் […]

Continue Reading

சிங்கப்பூரின் தேசிய விருதைப் பெற்ற இசையமைப்பாளர்

ஷபிர் என்று எல்லாராலும் ஒருமித்தமாக, அன்பாக அழைக்கப்படும் ஷபிர் தபாரே ஆலம், சிங்கப்பூர் இளைஞர்களுக்கான ஆகச் சிறந்த மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய சிங்கப்பூர் இளைஞர் தேசிய விருதினை பெற்றுள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் சகா, சங்குசக்கரம் ஆகிய திரைப்படங்கள் உட்பட பல படைப்புகளுக்கு ஷபிர் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியராகவும் சிறப்பு சேர்த்துள்ளார். 35 வயதுக்கு உள்ளாகவே தனது துறையில் அளப்பரிய சாதனைகள் செய்து, சமுதாயத்திற்கு தனது ஆற்றலால் சிறந்த தொண்டு ஆற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு இந்த […]

Continue Reading

கடமையாற்ற களத்திற்கு அழைக்கும் ஜி வி பிரகாஷ்

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பாமல் இருக்கின்றனர். இதனால் அவர்களை விரைவில் மீட்டுத்தர வலியுறுத்தி மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நடிகர் ஆரியும், இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷூம் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதனைத் தொடர்ந்து ஜி வி பிரகாஷ், கரம் கோப்போம் கண்ணீர் துடைப்போம் என்று கன்னியாகுமரி மீனவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அது […]

Continue Reading

அமரர் ஆனார் ஆதித்யன்

தமிழ்ப்பட உலகின் பிரபல இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன். இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’ உள்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் பெரும்பாலான பாடல்கள் பிரபலமானவை. இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஏராளமான ரீமிக்ஸ் பாடல்களையும், பாப் பாடல் களையும் பாடி இருக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இவரிடம் பயிற்சி பெற்றவர். ஆதித்யன் சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். கடந்த ஒரு வார காலமாக ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றார். […]

Continue Reading

ஆஹா கல்யாணம்!… தரணுக்கும், தீக்‌ஷிதாவுக்கும்

பாக்யராஜ் இயக்கிய ‘பாரிஜாதம்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தரண். சிம்பு நடித்த ‘போடா போடி’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஆஹா கல்யாணம்’, பிரபு சாலமன் இயக்கிய ‘லாடம்’ உள்பட 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். தரணுக்கும் நகர்வலம், ஆகம் ஆகிய படங்களில் நடித்துள்ள தீக்‌ஷிதாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற 15-ந்தேதி திருப்பதியில் நடக்கிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி 16-ந்தேதி சென்னையில் நடக்கிறது. […]

Continue Reading

மொட்டை போட்டு, புருவத்தையும் எடுத்து விட்டார்கள் : இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் இசைக்கலைஞர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள். அவர்கள் மத்தியில் பேசிய இளையராஜா, “நான் திரைப்படங்களுக்கு இசையமைத்து 40 வருட காலங்கள் முடிந்து விட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, ஒலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் இந்த பேரண்டத்தில் நடக்கப்போவது […]

Continue Reading

இசையமைப்பாளர் இமானிடம் பாராட்டை பெற்ற செந்தில் குமரன்

தமிழர்கள் பெரும்பாலானோர் உலகம் முழுவதும் சென்று வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்தாலும் தமிழர்கள் என்ற உணர்வோடு பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். அப்படி தமிழ்நாட்டில் இருந்து கனடாவிற்கு சென்றவர் தான் செந்தில் குமரன். யார்க் யூனிவர்சிட்டியில் பி.ஏ. படித்த இவர், தற்போது கனடாவில் மார்கெட்டிங் பிசினஸ் செய்து வருகிறார். தமிழ் மொழி மீதும், பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட செந்தில் குமரன், 2003ம் ஆண்டு முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 2004, […]

Continue Reading
maris vijay

இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் உருவாக்கியுள்ள “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ!

இசை என்பதே, ஏகாந்தமான ஒன்று. அதிலும் சினிமா இசை, காலம்தோறும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. சினிமாவின் அடிநாதமாக இருக்கும் பாடல்களையும், பின்னணி இசையையும் உருவாக்குவதில் முக்கியமான அங்கம் வகிப்பவை ஒலிப்பதிவு கூடங்கள் என்று அழைக்கப்படுகிற ஸ்டுடியோக்கள். அந்த வகையில், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக உருவாகி உள்ளது, “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ. சென்னை அசோக் நகரில், அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அழகான அட்மாஸ்பியர் கொண்ட “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி உள்ளார், இசையமைப்பாளர் மாரீஸ் […]

Continue Reading