உதவி இயக்குநர்களின் வாழ்க்கையில் வளம் சேர்க்கும் கோரிக்கைகள் : விக்ரமன்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவர் விக்ரமன், துணைத் தலைவர் கே.எஸ்.ரவிக்குமார், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி உள்பட சங்கத்தினர் பலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்துப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து அவர்களை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் உள்பட சங்கத்தினர் சந்தித்துப் பேசினர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த விக்ரமன், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் […]

Continue Reading

எம்ஜிஆர் வேடத்திற்குத் தேர்வான அதிர்ஷ்டக்கார நடிகர்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவானாகவும், தமிழகத்தின் முன்னாள் முதல்வரகவும் விளங்கிய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகிறது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் வேகமகமாக நடைபெற்று வருகிறது. அதறகாக நடிகர் நடிகையர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, எம்.ஜி.ஆரின் சிறுவயது தொடங்கி மூன்று பருவங்களுக்குடைய அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. ரமணா கம்யூனிகேஷன்ஸின் முந்தைய தயாரிப்புகளான ‘காமராஜ்’ மற்றும் ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ […]

Continue Reading

தமிழகத்தின் 29வது ஆளுநராக பன்வாரிலால் பதவியேற்பு

தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் முடிவடைந்ததையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளால் தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இதைத்தொடர்ந்து அசாம் மாநில ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோகித்தை தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ந்தேதி உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் […]

Continue Reading

விடைபெற்றார் வித்யாசாகர் ராவ்

தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய […]

Continue Reading

புதிய சேனல் ஆரம்பிக்கும் எடப்பாடி பழனிச்சாமி

அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயா டி.வி., டி.டி.வி.தினகரன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கட்சி சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள இந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியைத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள். ஆனால் டி.டி.வி.தினகரன் தொடர்பான செய்திகள் மட்டுமே வெளியிடப்படுகிறது. அரசுத் திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை தவிர்த்து விடுகின்றனர். இதனால் எடப்பாடி அணியினர் தங்களை பற்றிய தகவல்களை தொண்டர்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியாமல் திணறுகின்றனர். எனவே புதிதாக நாளிதழ் மற்றும் […]

Continue Reading

சசிகலா நியமனம் ரத்து : அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. (அம்மா) என்றும், அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) என்றும் 2 ஆக உடைந்த அ.தி.மு.க. சமீபத்தில் ஒன்றாக இணைந்தது. இதற்கு டி.டி.வி.தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு 21 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக் […]

Continue Reading

அணிகள் இணைப்பு குறித்து இன்று முடிவு : ஓ பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதையடுத்து அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சிகள் மீண்டும் தீவிரமாகி உள்ளது. இது தொடர்பாக இரு அணி தலைவர்களும் இன்றிரவு சந்தித்து பேசத் திட்டமிட்டுள்ளனர். அப்போது அதிகாரப் பகிர்வுகள் மற்றும் சசிகலா குடும்பத்தை முழுமையாக ஒதுக்குவது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதில் ஒருமித்த […]

Continue Reading

விதிமீறிய முதல்வர் பதவியிழக்க நேரிடும் – டி.டி.வி தினகரன்

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பதவியில் செயல்பட இயலாது என அக்கட்சியின் தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய நிர்வாகிகளை நியமிப்பதாக தினகரன் பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது எனவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.டி.வி தினகரன், “என்னை நீக்கியதாக வெளியான தீர்மானத்தில் வெறும் அதிமுக என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி […]

Continue Reading

அப்துல் கலாம் மணிமண்டபம் திறக்க நாளை பிரதமர் வருகை

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தில் பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ.15 கோடி செலவில் அப்துல் கலாம் மணிமண்டபம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில், அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைக்கோள் மாதிரி, கலாமின் 700-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், அவர் தொடர்பான 91 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அப்துல் கலாமின் 2-ம் ஆண்டு நினைவு தினமான நாளை (வியாழக்கிழமை) இந்த மணிமண்டபத்தைப் பிரதமர் நரேந்திர மோடி […]

Continue Reading

ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மோடி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. டெல்லியில் […]

Continue Reading