29-வது முறையாக இணையும் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் […]

Continue Reading

பொங்கல் விடுமுறைக்கு எம் ஜி ஆர் படத்தின் தொடர்ச்சி

புதுமுக இயக்குநர் எஸ் கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் குலேபகாவலி. இப்படத்தில் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், சந்தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அறம் படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் தயாரித்துள்ளார். மேலும் எம் ஜி ஆர் நடிப்பில் கடந்த 1955-ஆம் ஆண்டு வெளியான `குலேபகாவலி’ படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் […]

Continue Reading

முன்னாள் முதல்வருக்காக இந்நாள் முதல்வர்!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.வேணுகோபால் மற்றும் அமைச்சர் கே.பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் ஆக […]

Continue Reading

இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் சிவாஜி, கமலை விட நல்ல நடிகர்கள் – விஜயகாந்த்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததைக் கண்டித்து தேமுதிக சார்பில் இன்று மதியம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என்றார்கள். ஆனால், ஓராண்டு முடிவதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார். இந்த ஓராண்டில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்து விட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை கூறுகிறது. நெல்லையில் கந்து […]

Continue Reading

எம் ஜி ஆரின் பேரன் நடிக்கும் புதிய படம்

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் எஸ் பி கே ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் மற்றும் செல்வ குமார் இணைந்து தயாரிக்கும் படம் ‘வாட்ஸ் அப்’. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன். இவருக்குத் தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர […]

Continue Reading

நூற்றாண்டு விழாவில் வெளியாகும் 100 ரூபாய் நாணயங்கள்

அரசின் சார்பில், மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவர்களைக் கெளரவிக்கும் விதமாக அவர்களது உருவம் பொறித்த தபால்தலைகள் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் அவர்களது உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியிடப்பட உள்ளன. இதுபற்றி மத்திய நிதி அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த புதிய நாணயங்கள் 100 ரூபாய், 10 ரூபாய் மற்றும் […]

Continue Reading

எம்.ஜி.ஆர்-ஆக நடித்திருக்கும் ராணா

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு ராணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நான் ஆணையிட்டால்’. இதில் ராணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் கேத்ரின் தெரசா, ஜெகன், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் ராணா, ஜெகன், மயில்சாமி, சிவாஜி, இயக்குனர் தேஜா ஆகியோர் கலந்து கொண்டனர்… ஜெகன் பேசும்போது, எனக்கு இந்த படம் மிகவும் சர்ப்ரைஸ். இயக்குனர் தேஜா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரைப்பற்றி தெரிந்துக் கொள்ள கூகுளில் […]

Continue Reading

மீண்டும் வருகிறார் “மாட்டுக்கார வேலன்”!

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், மாட்டுக்கார வேலன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம், “மாட்டுக்கார வேலன்”.  ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் […]

Continue Reading