பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்;பாலிவுட் நடிகர் சல்மான்கான்

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார். உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார். ஆனால், […]

Continue Reading

எஸ்.பி.பி.குணமடைய இலங்கையில் தமிழ் கலைஞர்கள் கூட்டு பிரார்த்தனை

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு 16 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசம் அடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் பொருத்தி தேசிய மற்றும் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனையுடன் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பொதுமருத்துவம், இருதய நோய், நுரையீரல், தொற்றுநோய் போன்றவற்றில் […]

Continue Reading

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை – ஒன்று சேரும் திரைப்பிரபலங்கள்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் பாரதிராஜா உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து பிரபலங்கள் பலர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை காணலாம். நடிகர் பார்த்திபன் தமிழர் மரபில் […]

Continue Reading

அப்பா குணமடைந்து வீடு திரும்புவார்- எஸ்.பி.பி சரண் வெளியிட்ட வீடியோ பதிவு

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்ட வீடியோவில் பேசி இருப்பதாவது: #SPB health update 16/8/2020 pic.twitter.com/zK0hn3rDMg — S. P. Charan (@charanproducer) […]

Continue Reading

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய திரைபிரபலங்கள் பிரார்த்தனை

முன்னாள் கதாநாயகன் மோகன் படங்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிக பாடல்கள் பாடி உள்ளார். கொரோனா பாதிப்பினால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய பிரார்த்திப்பதாக நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். முன்னாள் கதாநாயகன் மோகன் படங்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிக பாடல்கள் பாடி உள்ளார். மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் சினிமாவுக்கு வரும் முன்பே எஸ்.பி.பியின் ரசிகன். அவருடைய பாடல் களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். தமிழில், நான் நடித்த ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் ஜாக்கிங் […]

Continue Reading

எனது தந்தை விரைவில் குணமடைந்து வருவார் வதந்திகளை நம்ப வேண்டாம் – எஸ்.பி.பி.சரண்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி உடல்நிலை பூரண நலம்பெறப் பிரார்த்தனை செய்வதாக இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பதிவில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு […]

Continue Reading