பாடல்களில் மாயம் நிகழ்த்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு சகாப்தம்

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இதுவரை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு சான்று. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் உலகின் அதிக பாடல்கள் பாடிய பாடகர் என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஒரே நாளில் 21 பாடல்களை […]

Continue Reading

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு, திரைப்பிரபலங்கள் இரங்கல்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் தொகுப்பு கமல்ஹாசன் அன்னைய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஏர்.ரகுமான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் […]

Continue Reading

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ் பி பி காலமானார்

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக உடல்நிலை தேறி வந்த நிலையில், நேற்று அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை […]

Continue Reading

எஸ் பி பி யின் உடல் நலம் குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து […]

Continue Reading

எஸ்.பி.பி அவர்கள் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்யும் திரை பிரபலங்கள்

எஸ்.பி.பி அவர்கள் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்யும் திரை பிரபலங்கள் திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். தற்போது எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.பி.பி அவர்கள் குணமடைய இந்தக் கூட்டுப் பிரார்த்தனை மூலம் குரலில் பொன்மனச் செம்மலான எஸ்.பி.பியை மீட்டெடுப்போம் வாருங்கள்.குரல் காற்றில் மீண்டும் ஒலிக்க வேண்டும். ஒன்று […]

Continue Reading

வெண்டிலேட்டர் உதவியுடன் எனது தந்தை எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது – எஸ்.பி.பி.சரண்

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. எஸ்.பி.பிக்கு தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இன்று எஸ்.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது: BREAKING!! சற்று முன் !! "புரளிகளை நம்பாதீர்கள்! அப்பா இன்னும் ventilator-ல் (செயற்கை […]

Continue Reading

பாடும் நிலா பாலு சாரு, சீக்கிரம் குணமடைந்து வருவார் பாரு… வேல் முருகன் பாடிய பாடல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் […]

Continue Reading

வதந்திகள் வருத்தமளிக்கிறது : எஸ்.பி.பி

தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் பல பாடல்களைப் பாடியவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பெரும்பாலான ஹிட் பாடல்கள் இவர் பாடிய பாடல்களாகவே இருக்கும். இவர் தற்போது பல வெளிநாடுகளில் இசை கச்சேரி நடத்தி வருகிறார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உடல் நிலை சரியில்லை என்று சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு உடல் நிலை சரியில்லை என்று உலகம் முழுவதிலும் இருந்து போன் வருகிறது. நான் […]

Continue Reading