தலைவி படத்திற்காக புதிய தோற்றத்தில் கங்கனா ரணாவத்

ஜெயலலிதாவாக நடிக்கும் தனது தோற்ற புகைப்படம் ஒன்றை கங்கனா டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் திரைப்படமாக தயாராகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். கொரோனா பரவலுக்கு முன்பே தலைவி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளனர். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் பிரமாண்ட மாநாடு மற்றும் ஊர்வல காட்சிகளுக்கு கொரோனா காரணமாக கிராபிக்சை பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் ஜெயலலிதாவாக நடிக்கும் […]

Continue Reading

இதற்காக இந்தி பட உலகம் வெட்கப்பட வேண்டும்” – கங்கனா ரணாவத்

அரியானாவை சேர்ந்த கல்லூரி மாணவி நிகிதா சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளி, மிர்ஸாபுர் தொடரை பார்த்த பிறகுதான் நிகிதாவை கொலை செய்யும் எண்ணம் வந்தது என்று அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தன்னுடன் வாழும்படி வற்புறுத்தியவன் ஆசைக்கு இணங்காமல் உயிரை விட முன் வந்த நிகிதாவின் துணிச்சல் ராணி லட்சுமிபாய், பத்மாவதி ஆகியோருக்கு குறைந்தது அல்ல. திரைப்படங்களில் குற்றவாளிகளை கதாநாயகர்களாக காட்டினால் […]

Continue Reading

இந்தி பட உலகில் பல பெண் பித்தர்கள் உள்ளனர் – கங்கனா பாய்ச்சல்

இந்தி பட உலகில் மீ டூ புகார் சில மாதங்களாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இந்த சர்ச்சை விவாதமாகி வருகிறது. இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் தனக்கு நடிகர்களால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் வருமாறு: பாயல் கோஷ் சொன்ன பாலியல் புகாருக்கு அனுராக் காஷ்யப் மிகவும் […]

Continue Reading

கங்கனா ரணாவத் பங்களா வீட்டில் சட்டவிரோத கட்டுமானங்கள் – மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு

நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது. இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது. மராட்டியத்தில் ஆளும் கட்சியினருடன் மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை […]

Continue Reading

மும்பை வருகிறேன் தடுத்து பாருங்கள் – கங்கனா ரணாவத் சவால்

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், போதை பொருள் புழக்கம் உள்ளது என்றெல்லாம் நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி வருகிறார். வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக மராட்டிய அரசியல்வாதிகள் மற்றும் மும்பை போலீசாரையும் சாடினார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, கங்கனா மராட்டியத்தையும் மும்பை போலீசையும் அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் மும்பைக்கு திரும்ப வேண்டாம் என்று கூறியிருந்தார். மராட்டிய மந்திரி அனில் […]

Continue Reading

தமன்னா, மஞ்சிமாவுடன் காஜல்!

கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “குயின்”. இந்த படத்தில் நடித்ததற்காகத் தான் நடிகை கங்கனாவிற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகைகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பெரிய பொருட்செலவில், பல நட்சத்திர நடிகர்களை வைத்து இந்த படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். பாரிஸ் பாரிஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

வாள் சண்டையில் காயப்பட்ட குயின்

‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்துத் தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் டைரக்டு செய்கிறார். இதில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை எடுத்து வந்தார். […]

Continue Reading

தேஜூவை இயக்கும் கங்கணா

கங்கனா ரணாவத் இந்திப்பட உலகின் துணிச்சலான நடிகை. இவர் தற்போது ‘சிம்ரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது, செப்டம்பர் 15-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை ஹன்சன் மேத்தா இயக்கி இருக்கிறார். கங்கணா அடுத்ததாக ‘தேஜூ’ என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி கூறிய கங்கனா ரணாவத்…. ‘‘நான் ‘தேஜூ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘தேஜூ’ படத்தின் வேலைகள் தொடங்க இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும். […]

Continue Reading