நடிகர் கமலுக்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் மனு!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்ததிலிருந்து அவர் மீது வழக்கிற்கு மேல் வழக்கு தொடுக்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு குறித்த கமலின் கருத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், முகாந்திரம் இருந்தால் அவர் மேல் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. கடந்த மாதம் கூட, “இந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனியும் சொல்ல முடியாது” என்ற கமலின் கருத்திற்கு உத்தரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சில இந்து அமைப்புகள் கமலை சுட்டுக் […]

Continue Reading

நடிகர்கள் போடும் முதல்வர் கணக்கு!

நிச்சயமாக தமிழக அரசியலின் போதாத காலம்தான் இது. இருபெரும் துருவங்களாக தமிழகத்தின் அரசியலை நிர்மாணித்தவர்களாக இருந்த கலைஞரும், ஜெயலலிதாவும் சுகவீனப்பட்டுப் போக.. இத்தனை ஆண்டுகளாக வேறு யாருக்கும் விட்டுத் தராமல் கட்டிக்காத்து வந்த களம், இரு தலைமைகளின் வாரிசுகளை சோதனைக்கு மேல் சோதனைகளை சந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த யூகிக்க முடியாத குழப்பங்கள் சுழற்றியடிக்கும் சூழல் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் சினிமாப் புகழையும் தங்களுக்கிருக்கிற ரசிகர் படையையும் வைத்து எப்படியாவது இந்த களத்தைக் கைப்பற்ற முடியுமா? […]

Continue Reading

ட்விட்டர் To துறைமுகம்… ஆண்டவர் அதிரடி!!

ரஜினி போருக்குத் தயாராகிறாரோ இல்லையோ, கமல் போரை ட்விட்டரில் எப்போதோ தொடங்கிவிட்டார். நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக செந்தமிழில் ட்வீட் தட்டி ஆள்பவர்களுக்கு கடுப்பேற்றினார். ஆளும் தரப்பும் அவரை காட்டுக்கு வா, காட்டுக்கு வா என்பது போல் “ முடிந்தால் களத்திற்கு வந்து அரசியல் செய்து பார்” என்று வம்பிழுக்க.. ஒரு வழியாய் கமல் களத்திற்கு வந்தே விட்டார். நவம்பர் 7ஆம் தேதி முக்கிய அறிவிப்பு, என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்துவிட்டு.. நேற்று தான் எண்ணூர் கழிமுகத்தைப் […]

Continue Reading

மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பிரபலங்கள்!

மெர்சலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும் வெளியேயும் சினிமா, அரசியல் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. பின்வரும் படங்களில் அவற்றைக் காணலாம்…    

Continue Reading

விக்ரம் மகனுக்கு ஜோடியாக கமல் மகள்?

சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் `அர்ஜுன் ரெட்டி’. தெலுங்கில் கிடைத்த அமோக வரவேற்பால் இப்படத்தை தமிழ், மலையாளத்தில் ரீமேக் செய்ய இருக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை பாலா இயக்கவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நாயகனாக துருவ் விக்ரம், இயக்குனராக பாலா என இப்படத்தின் அடுத்தடுத்த தகவல்கள் எதிர்பார்ப்பை […]

Continue Reading

பூநூலே இல்லாத கலைஞானி நான் : கமல்ஹாசன்

  ‘முரசொலி’ நாளிதழின் பவள விழா வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். விழாவில், ‘இந்து’ குழுமத்தின் தலைவர் இந்து என்.ராம், நடிகர் கமல்ஹாசன், ‘தினத்தந்தி’ தலைமை பொதுமேலாளர்(நிர்வாகம்) ஆர்.சந்திரன், கவிஞர் வைரமுத்து, ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் மேலாண் இயக்குனர் பா.சீனிவாசன், ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ‘தினமலர்’ ஆசிரியர் ரமேஷ், ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆசிரியர் […]

Continue Reading

⁠⁠⁠தம்பி ஜெயக்குமார், எலும்பு வல்லுநர் எச்.ராஜா – வெளுத்து வாங்கும் கமல்!

நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் குறித்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகியிருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்களும், பாஜகவினரும் கடும் எதிர்வினை ஆற்றியிருந்தனர. இந்நிலையில், நேற்று அவர் டிவிட்டரில் எழுதியிருந்த கவிதையில் ‘முடிவெடுத்தால் யாமே முதல்வர்’ என்று சொல்லியிருந்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தன்னை விமர்சித்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு பதிவையிட்டிருக்கிறார் கமல். அதில், “ஊரே கூடி ஊழல் ஊழல் என்று ஓலமிட்டதை ஊடகத்தில் […]

Continue Reading

விஸ்வரூபம் 2ம் பாகத்தின் முதல் பார்வை வெளியிட்டார் கமல்

கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியான ‘விஸ்வரூபம்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, சில மாதங்களிலேயே அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் பட வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில், இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அதற்கு முன்னோட்டமாக தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்பின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என […]

Continue Reading

பார்ட் டூ-வின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னோட்டம் இன்று மாலை […]

Continue Reading

அண்ணன் இல்லாத வாழ்க்கை எனக்கு கஷ்டமாக இருக்கிறது: இரங்கல் கூட்டத்தில் கமல் பேச்சு

நடிகர் கமல்ஹாசனின் சகோதரரும், வக்கீலுமான சந்திரஹாசன் கடந்த மாதம் மார்ச் 19-ந் தேதி லண்டனில் உள்ள தனது மகள் அனுஹாசன் வீட்டில் காலமானார். இந்நிலையில், சந்திரஹாசனின் மறைவுக்கு இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், கமல், ரஜினிகாந்த், சாருஹாசன், அனுஹாசன், அக்ஷராஹாசன், சுஹாசினி, ராம்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கிரேஸி மோகன், மௌலி, பிரமிட் நடராஜன், லிசி, அம்பிகா, ரோகிணி, புஷ்பா கந்தசாமி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது கமல் பேசும்போது, என்னுடைய […]

Continue Reading