கருணாநிதியுடன் மு க அழகிரி சந்திப்பு

நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் – தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த […]

Continue Reading

கோபாலபுரத்தில் கல்யாண வைபோகம்

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கோபாலபுரத்தில் கருணாநிதி முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. மணமக்களை, கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வாதம் வழங்கினார். இவ்விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, மணமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கலைஞர் அவர்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது […]

Continue Reading

கண்ணகி, காந்தி சிலை வரிசையில் சிவாஜி சிலை

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர். பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. இதனையடுத்து 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி […]

Continue Reading

கருணாநிதியிடம் வைர விழா அழைப்பிதழ் வழங்கிய ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதி, தமிழக சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏ-வாக அடி எடுத்து வைத்து, தற்போது 60 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதை வைரவிழாவாகக் கொண்டாட முடிவுசெய்து, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க-வினர் உற்சாகமாக வேலைசெய்து வருகின்றனர். கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, இந்த வைர விழா நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை, மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தனர். வைரவிழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் அளித்துள்ளனர். அதன் […]

Continue Reading