புரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு

உலக எம்ஜிஆர் பேரவை சார்பில் உலக எம்ஜிஆர் பிரதிநிதிகள் மாநாடு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் விழாவை துவக்கி வைத்தார். விழாவின் முத்தாய்ப்பாக அனிமேஷனில் தயாராகி வரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடும் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு ஏசி சண்முகம் மற்றும் சைதை துரைசாமி இசைத்தகட்டினை வெளியிட நடனப்புயல் பிரபுதேவா மற்றும் இயக்குனர் விஜய் பெற்றுக் கொண்டனர். […]

Continue Reading

29-வது முறையாக இணையும் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் […]

Continue Reading