பார்த்திபன் படத்தின் தயாரிப்பு நிறுவனம்

‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், ‘உள்ளே வெளியே’ 2-ம் பாகத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை இணையதளம் மூலம் தேடி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இதுதவிர மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம் எஸ் பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். […]

Continue Reading

கெளதம் மேனன் அறிமுகப்படுத்தும் தனுஷின் ’விசிறி’

இயக்குனர் கெளதம் மேனன் தற்போது தனுஷை வைத்து `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்ட்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இசையமைப்பாளர் யார் என்று வெளியிடாமலே இப்படத்தில் இடம் பெறும் “மறுவார்த்தை பேசாதே” என்ற பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான ‘நான் பிழைப்பேனா…’ என்ற பாடலும் ரசிகர்களை முணுமுணுக்க வைத்தது. பின்னர் […]

Continue Reading

பிப்ரவரியில் வெளியாகும் தனுஷ் படம்

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கவுதம் மேனன் தற்போது விக்ரமை வைத்து `துருவ நட்சத்திரம்’ படத்தை உருவாக்கி வருகிறார். தற்போது விக்ரம் `சாமி-2′ படத்தில் பிசியாகி இருப்பதால், தான் கிடப்பில் போட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை […]

Continue Reading

படம் பார்க்கும் ஆவலுடன் கெளதம் மேனன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான `துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் தற்போது `நரகாசூரன்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார். அரவிந்த் சாமி, இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தை கெளதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் நரேனின் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படம் குறித்து கெளதம் மேனன் டுவிட்டரில் […]

Continue Reading

கோலிசோடா-2க்கு குரல் கொடுத்த கெளதம் மேனன்

விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற `கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தை விஜய் மில்டனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் பட நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகை சுபிக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தை விஜய் மில்டன் ரகசியமாகவே வைத்திருக்கிறார். […]

Continue Reading

துருவ நட்சத்திரம் தோன்றும் காலம்?

விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்தை நடித்து முடித்த சியான் விக்ரம், அடுத்ததாக `துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதில் விக்ரம் ஒரு உளவு அதிகாரியாக மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. கவுதம் மேனனின் கனவு படமான `துருவ நட்சத்திரம்’ அமெரிக்கா, ஸ்லோவேனடியா, பல்கேரியா, துருக்கி மற்றும் அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், சதீஷ், டிடி, வம்சி […]

Continue Reading