மதுபானக்கடை ரவியின் ஃபார்முலா

தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து நல்ல பெயர் வாங்குவது எளிது. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பேர் வாங்குவது ரொம்பவும் கஷ்டம். அந்த வகையில் சமீபகாலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து கைதட்டல் வாங்கி வருகிறார் ரவி. மதுபானக்கடை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்ததால் மதுபானக்கடை ரவி என்றால் கோடம்பாக்கம் முழுக்க தெரிகிறது. ஆரம்பத்தில் காமதேனு மசாலா என்ற பெயரில் மசாலா பாக்கெட் தொழிலில் ஈடுபட்டிருந்த ரவி இன்று சினிமாவில் மசாலா காதாபாத்திரங்களில் திறமை காட்டி […]

Continue Reading

சண்டக்கோழிக்காக சென்னையில் உருவாகும் அழகான மதுரை

‘துப்பறிவாளன்’ மற்றும் ‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் விஷால். லிங்குசாமி இயக்கவுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னையில் உள்ள பின்னிமில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் […]

Continue Reading

கருப்பு ராஜா வெள்ளை ராஜாவும் தனித்தனியா வர்றாங்களா?

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி இணைந்து நடிக்க ஒப்பந்தமான படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. இப்படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. படப்பிடிப்புக்கு முன்பே இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியது. படத்தின் பாடலுக்காக பிரபுதேவா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் வெளிநாடு சென்றிருந்தனர். மேலும் 4 பாடல்களும் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு காரணங்கள் ஏதுமின்றி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாக புதிய […]

Continue Reading