வேதாள வில்லனுடன் மோதும் சித்தார்த்

`சைத்தான் கா பச்சா’ படத்தை தொடர்ந்து சித்தார்த் அடுத்ததாக புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூலை 13-ஆம் தேதி துவங்குகிறது. இந்த படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் தெரசாவும், முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கின்றனர். இந்த படத்தில் சித்தார்த்துக்கு வில்லனாக வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. […]

Continue Reading

அவள் விமர்சனம்!

பிசாசு படத்திற்குப் பிறகு கொஞ்சம் நெகிழ்வைத் தந்த ஒரு பேய்ப்படம். பெண்குழந்தைகளின் மகத்துவத்தை மையக்கருத்தாகக் கொண்டதிலேயே வழக்கமான பேய்ப்படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறாள் “அவள்”. ஒரு பேய்ப்படத்திற்கு ஹீரோ, ஹீரோயினை விட முக்கியமானவை ஒளிப்பதிவு, பின்னணி இசை, பிற தொழிற்நுட்பங்களும் தான். அந்த வகையில் இந்த மூன்றும் படத்திற்கு மிகப்பெரிய பலமாகவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்பட்டிருக்கிற கேமரா கோணங்களாகட்டும், பின்னணி இசை கச்சிதமாக ஒலிக்க விடப்பட்டுள்ள இடங்களாகட்டும் படத்தை வேறுதளத்திற்கு இட்டுச் செல்வதில் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் […]

Continue Reading

நவம்பரில் மிரட்ட வருகிறாள் ”அவள்”!

சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் மிலிண்ட் ராவ் இயக்கியிருக்கும் படம் “அவள்”. ‘வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘ஏடாகி என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். டிரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படம் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். ”விக்ரம் வேதா” படத்தை தொடர்ந்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனம் ”அவள்” படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது. இது குறித்து ‘டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் பேசுகையில், ”அவள்” திரைப்படம் சினிமா […]

Continue Reading

”பிரேமம்” இயக்குனரின் அடுத்த தமிழ்ப்படம்!

தமிழில் “நேரம்”, மலையாளத்தில் “பிரேமம்” ஆகிய படங்களை இயக்கியவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். அடுத்தடுத்து நல்ல படங்களை இயக்கி எதிர்பார்ப்பிற்குறிய இயக்குனராக மாறிய இவர், தற்போது தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். நடிகர் ஜயராமின் மகன் காளிதாஸை வைத்து அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும், அதே படத்தில் தனது நெருங்கிய நண்பரும், பிரபல நடிகருமாகிய சித்தார்த்தும் முக்கியமான கதபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் அல்ஃபோன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெறிவிக்கையில், ”இந்த படத்தை முழுக்க முழுக்க இசை சம்பந்தப்பட்ட […]

Continue Reading

இயக்குநர் சசியின் அடுத்த பட டைட்டில்

சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான `பிச்சைக்காரன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக முன்னதாகப் பார்த்திருந்தோம். குடும்ப பின்னணியில் அன்பு, கோபம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் […]

Continue Reading

நிர்பயா வழக்கு தீர்ப்பு குறித்து நடிகர் சித்தார்த் கருத்து

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நிர்பயாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர்கள் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் அவர்களது மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு திரையுலக பிரபலங்கள் […]

Continue Reading