பாம்பை பிடித்த வீடியோ சிம்பு மீதான புகார் குறித்து வனத்துறை விசாரணை

ஈஸ்வரன் படத்தில் சிம்பு பாம்பை பிடித்த வீடியோ மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்தது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரில் சிம்பு கழுத்தில் பாம்பை சுற்றி பிடித்து இருப்பது போன்று போஸ் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் வனப்பகுதியில் மரத்தில் தொங்கும் ஒரு பாம்பை சிம்பு தனது கையால் பிடித்து சாக்கு பையில் போடும் வீடியோ […]

Continue Reading

கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிம்பு

சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர். அதற்கெல்லாம் பதிலடி […]

Continue Reading

பரதம் கற்கும் சிம்பு…. வைரலாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சிம்புவின் இந்த அதிரடி மாற்றம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் சிம்பு பரதநாட்டியம் கற்று வருகிறாராம். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பது நடிகர் விஜய்யோட ரீல் தங்கை […]

Continue Reading

மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்த சிம்பு….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி உள்ளார். தமன் இசையமைக்கிறார். சில வருடங்களுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் […]

Continue Reading

சுசீந்திரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை?

சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி உள்ளனர். அதன்பிறகு கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்தநிலையில் சிம்பு இன்னொரு புதிய படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, […]

Continue Reading

ரீமேக் படத்தில் பார்த்திபன், சிம்பு?

பிரித்விராஜ், பிஜுமேனன் நடித்து மலையாளத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’ பிரித்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும், பிஜூமேனன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்து இருந்தனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர். தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா படங்களை தயாரித்த கதிரேசன் வாங்கி இருக்கிறார். இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி நடிகர் ஜான் அபிரகாம் பெற்றுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் சச்சி சமீபத்தில் மாரடைப்பால் […]

Continue Reading

மாப்பிள்ளையுடன் கேக் வெட்டும் சிம்பு வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவின் தங்கையான இலக்கியா, தனது சமூக வலைத்தளத்தில், மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ”ஜேசனின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டம் இது. அதுவும் அவன் மாமாவுடன்” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் […]

Continue Reading

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது.

நடிகர் சிம்பு கடைசியாக நடித்த வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து ஹன்சிகாவின் 50 வது படமான “மகா” திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு விமானியாக நடித்துள்ளார். இப்படத்தில் சிம்பு நடிக்கும் காட்சிகள் இந்த வார இறுதிக்குள் எடுத்து முடிக்கப்படும் என கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு […]

Continue Reading

வந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம் 2.75/5

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்க லைகை புரொடக்‌ஷன் தயாரிக்க உருவாகி இன்று வெளிவந்துள்ளது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். நாசரின் சம்மதம் இல்லாமல் பிரபுவை ரம்யா கிருஷ்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால், ரம்யா கிருஷ்ணனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் நாசர். லட்சம் கோடி சொத்து இருந்தும் தனது மகள் ரம்யா கிருஷ்ணன் தன்னை விட்டு பிரிந்து இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறார் நாசர். பல வருடங்களுக்கு பிறகு, தனது மகன் […]

Continue Reading

சிம்பு-சுந்தர் சி கூட்டணியில் கைகோர்த்த ரோபோ சங்கர்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச் சிவந்த வானம் படத்திற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் சிம்பு. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் முடித்த கையோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் கையோடு தொடங்கியிருக்கின்றனர் படக்குழுவினர். இக்கூட்டணியில் தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading