பேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து!

ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் இணைந்து உருவாக்கியுள்ள படம்தான் ‘விஸ்வாசம்’. சத்யஜோதி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இவ்விரு படங்களும் பொங்கல் விருந்தாக நாளை திரைக்கு வர இருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு பொங்கல் தினத்தில் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இப்படங்கள் இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பேட்ட , விஸ்வாசம் இரண்டும் ரசிகர்களுக்கான […]

Continue Reading

விஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்!

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக கைகோர்த்துள்ள படம் தான் ‘விஸாசம்’. இப்படத்தினை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. முதன் முறையாக டி இமான் இசையமைத்திருக்கிறார். நயன்தாரா அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ‘அட்ச்சி’ பாடலின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இப்படத்தின் கர்நாடகா உரிமையை ‘ஹரிஸான் ஸ்டுடியோ’ என்ற பெரிய நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading

தயாரிப்பாளரையும் விட்டுவைக்காத தமிழ்பட இயக்குநர்

தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்யும்படியாக உருவான படம் `தமிழ் படம்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இதன் இரண்டாவது பாகம் `தமிழ்படம் 2.0′ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதில் விஜய், அஜித், தனுஷ், மற்றும் பிரபல அரசியல்வாதிகளையும் கிண்டல் செய்து வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படத்தின் […]

Continue Reading