வெற்றிமாறன் பேனரில் புதிய படம்

‘அமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதையை ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ ஆகிய படங்களின் இயக்குனர் ஜெகன்நாத் எழுதியுள்ளார். புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய […]

Continue Reading

பேராசிரியர் மா நன்னன் மறைவுக்கு அஞ்சலி

கடலூர் மாவட்டத்தில் பிறந்த பேராசிரியரும், தமிழறிஞருமான மா நன்னன் இன்று சென்னையில் காலமானார். 94 வயதான இவர் தமிழில் கட்டுரை, பாடநூல்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பெரியார் விருது, தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். அரசு தொலைக்காட்சியில் இவர் நடத்திய தமிழ்ப் பாடங்கள் வரவேற்பைப் பெற்றன. எழுத்தறிவித்தலில் நன்னன் முறை என்ற முறையை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றவர். மறைந்த இவரின் உடலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் வீரமணி, […]

Continue Reading

விழித்திரு – குவியும் வாழ்த்துகள்!

இயக்குனர் மீரா கதிரவனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விழித்திரு’ திரைப்படத்திற்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டு மீரா கதிரவனுக்குத் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே திரு.சீமான், திரு.தொல்.திருமாவளவன், இயக்குனர்கள் வெற்றிமாறன், வசந்தபாலன், சீனு ராமசாமி, பாண்டிராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ்  ஆகியோர் தங்களது பாரட்டுகளைத் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது […]

Continue Reading

பற்றும் வதந்”தீ”.. பதறும் கோலிவுட்..

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி, வசூலில் தாறுமாறாக சாதனைகளை செய்து வரும் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக விஜய் நடிக்கப் போகும் “விஜய்62” படம் குறித்து பல தகவல்கள் அதற்குள் கசியத் தொடங்கிவிட்டன. ஏற்கனவே, விஜய்62 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்ற அதிகாரப் பூர்வமான அறிவிப்பு வந்தபிறகும் சுற்றும் இதுபோன்ற செய்திகள் :- வதந்தி நம்பர்1: ”ஸ்பைடர்” படம் சரியாக போகாத காரணத்தினால் ஏ.ஆர்.முருகதாஸை மாற்றி விடலாம் என்று விஜய் தரப்பும், தயாரிப்பு […]

Continue Reading

ரஜினியை விமர்சித்த சீமான்!

மெர்சல் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசமாட்டார் என கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், போர் வரும்போது மட்டுமே ரஜினி பேசுவார் என விமர்சித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது இவ்வாறு தெரிவித்த அவர்,  கட்டண விலை உயர்வால் மக்கள் திரையரங்கில் படம் பார்க்கும் நிலை இல்லை என்றும் கூறினார். இனிமேல் எல்லாரும் இணைய தளத்தில்தான் படம் பார்க்கும் நிலை ஏற்படும் என்றும் கூறினார். ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தற்போது […]

Continue Reading

உயில் ஒன்றில் நேதாஜியின் மர்ம மரணத்திற்கு விடை

ஆம்ஸி பிலிம்ஸ் சார்பாக ஆம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் தீபன் இயக்கியிருக்கும் திரைப்படம் “உயில் ஒன்று” இன்றும் பல புரட்சிகர இயக்கங்களுக்கு ரோல் மாடலாக இருப்பவர் நேதாஜி. நேதாஜி மரணம் இன்று வரை உலக நாடுகளில் பேசப்படுகிறது. அவர் இறந்து விட்டார் என்பவர்களும், இன்னும் இருக்கிறார் என்று நம்புபவர்களும் உண்டு. இதற்கான விடையை சொல்லும் படம் தான் இது. இந்தியாவில் முதல் முறையாக 360 டிகிரி “விர்ச்சுவல் ரியாலிட்டி” தொழில் நுட்பத்தில் படத்தின் தலைப்பை வெளியிட […]

Continue Reading

மிக மிக அவசரத்தில் பாட்டெழுதிய சேரன்

  பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். இப்படம் குறித்து அவர் பேசிய போது, “இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது […]

Continue Reading

தமிழக கட்சித் தலைவர்கள் குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக இன்றும் ரசிகர்களை சந்தித்து வருகின்றார். அப்போது ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் இன்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை அதிரடியாக கூறியுள்ளார். அதில், “45 ஆண்டுகாலமாக என்னை வாழ வைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சைத் தமிழன்; என்னைத் தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள். எதிர்ப்பு இன்றி வளரமுடியாது, எதிர்ப்பு தான் அரசியலில் மூலதனம். தமிழகத்தில் அரசியல் நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளது. அரசியல் […]

Continue Reading