பிரதமர் மோடியின் லட்சியம்

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு சிறிய வியாபாரிகளும், வணிகர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரிக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து அதில் மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடந்த கருத்தரங்கில் பேசிய பிரதமர் மோடி, “ஜி.எஸ்.டி. வரி அமலுக்குப் பின்பு நாட்டின் வரி விதிப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பில் […]

Continue Reading

ரஜினி, கமலிடம் வேண்டுகோள் வைத்த அல்போன்ஸ் புத்திரன்

சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மேலும், “சினிமாவையும் சூதாட்டத்தோடு ஒரே ஜி.எஸ்.டி வகையில் வைத்திருப்பது சரியா? தமிழ் சினிமாவில் மிகவும் மரியாதைக்குரிய பிரபலங்களாக இருக்கும் ரஜினியும், கமலும் பிரதமர் மோடியை சந்தித்து, ஜி.எஸ்.டி வரிவிதிப்பு […]

Continue Reading

தள்ளிப்போன பண்டிகை ரிலீஸ்

கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலட்சுமி தயாரித்து இருக்கும் ‘பண்டிகை’ படத்தை, பெரோஸ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை இன்று வெளியிட இருந்தனர். ஆனால் ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 3-ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தைத் […]

Continue Reading

திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் […]

Continue Reading

வாய் திறக்காதவர்களின் வாய்களெல்லாம் கதறுகிறது : தங்கர் பச்சான்

இந்தியா முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி குறித்து நடிகரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இதனால் நமக்கு என்ன கிடைக்கும் என நினைத்தால் இதுதான் கிடைக்கும்! விளை நிலங்களை சாகடித்தோம்! நீர் நிலைகள் அழிவதை பார்த்துக்கொண்டே இருந்தோம்! உழவர்கள் கதறினார்கள்! எதைப்பற்றியும் நாம் கண்டுகொள்ளவே இல்லை. அதன் அழிவின் தொடக்கம் தான் நம்மை நோக்கி இப்போது திரும்பியிருக்கிறது. எதற்கும் வாய் திறக்காதவர்களின் வாய்களெல்லாம் இப்போது GST, GST  என கத்துகிறது, கதறுகிறது! […]

Continue Reading

ஜி.எஸ்.டி.யால் ரிலீஸ் இல்லை ‘நெஞ்சம் மறப்பதில்லை’

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கஸாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒண்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குளோ ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் வருகிற 30-ந் தேதி வெளியிடப்போவதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். படத்திற்கான புரோமோஷன்கள் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, பலமுறை இப்படம் வெளியாகும் […]

Continue Reading