29-வது முறையாக இணையும் புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும்!

மக்கள் திலகம் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, நடித்த மிக பிரமாண்டமான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகமாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார் எம்ஜிஆர். பின் அரசியலில் பிஸியாகி முதலமைச்சராகி விட்டதால் அந்த படத்தை எடுக்க முடியாமலேயே போனது. அந்த கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தற்போது அனிமேஷனில் உருவாக்கி வருகிறார் […]

Continue Reading

ஆர் கே நகரில் அதிரடி காட்ட வரும் விஷால் ?

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்று அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு […]

Continue Reading

நடிகர்கள் போடும் முதல்வர் கணக்கு!

நிச்சயமாக தமிழக அரசியலின் போதாத காலம்தான் இது. இருபெரும் துருவங்களாக தமிழகத்தின் அரசியலை நிர்மாணித்தவர்களாக இருந்த கலைஞரும், ஜெயலலிதாவும் சுகவீனப்பட்டுப் போக.. இத்தனை ஆண்டுகளாக வேறு யாருக்கும் விட்டுத் தராமல் கட்டிக்காத்து வந்த களம், இரு தலைமைகளின் வாரிசுகளை சோதனைக்கு மேல் சோதனைகளை சந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த யூகிக்க முடியாத குழப்பங்கள் சுழற்றியடிக்கும் சூழல் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் சினிமாப் புகழையும் தங்களுக்கிருக்கிற ரசிகர் படையையும் வைத்து எப்படியாவது இந்த களத்தைக் கைப்பற்ற முடியுமா? […]

Continue Reading

இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் சிவாஜி, கமலை விட நல்ல நடிகர்கள் – விஜயகாந்த்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததைக் கண்டித்து தேமுதிக சார்பில் இன்று மதியம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், “ஜெயலலிதா அரசு 100 நாள் சாதனை 100 ஆண்டுகள் பேசும் என்றார்கள். ஆனால், ஓராண்டு முடிவதற்குள் ஜெயலலிதா இறந்து விட்டார். இந்த ஓராண்டில் தமிழகம் லஞ்சம், ஊழலில் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் இறந்து விட்டதாக மக்கள் நல்வாழ்வு துறை கூறுகிறது. நெல்லையில் கந்து […]

Continue Reading

கண்ணகி, காந்தி சிலை வரிசையில் சிவாஜி சிலை

தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். ‘நடிகர் திலகம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர். பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. இதனையடுத்து 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி […]

Continue Reading

அதிநவீன தொழில்நுட்பத்துடன் அடிமைப்பெண் திரைப்படம்

“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் ‘அடிமைப்பெண்’. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது. இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், […]

Continue Reading

நானும் ரஜினிகாந்த் ரசிகன் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ

கடந்த 22ஆம் தேதி, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “ரஜினிகாந்த் ஒரு வியாபாரி. இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்து விட்டனர். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை. கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் அறிவார். நடிகர்கள் களம் காணும் கட்சிகளால் பலனில்லை.” என்று கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட […]

Continue Reading

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியுடன் பன்னீர்செல்வம் சந்திப்பு

  முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடம் நடைபெற்றது. சந்திப்பின் போது எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், அசோக்குமார் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டியில், “பிரதமர் மோடியை சந்தித்து, தமிழ்நாட்டின் பிரச்சினைகள், முக்கிய தேவைகள், அதற்கு மத்திய அரசின் நிதி உதவி பற்றி பேசினோம். தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் […]

Continue Reading

மீண்டும் வருகிறார் “மாட்டுக்கார வேலன்”!

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், மாட்டுக்கார வேலன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம், “மாட்டுக்கார வேலன்”.  ப. நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் […]

Continue Reading