முதலில் தமிழ் சினிமா என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை – சுரேஷ் மேனன்

  சினிமா மீதான காதல் தான் இருக்கும் துறையையும் தாண்டி தன்னை இணைத்துக் கொள்ள வைக்கும். சினிமாவில் இயக்குனராக, நடிகராக, தயாரிப்பாளராக பல அவதாரங்களை எடுத்து சாதித்திருக்கும் சுரேஷ் மேனன், சினிமா மீது அளவு கடந்த காதலை வைத்திருப்பவர். இருபது ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சோலோ, தானா சேர்ந்த கூட்டம் படங்களின் மூலம்  மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார்.     இது குறித்து சுரேஷ் மேனன் கூறும்போது, “சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு. நான் […]

Continue Reading

மரணத்தின் பிடியில் தமிழ் சினிமா!

பொதுவாகவே எல்லா வர்க்கத்தினரும் கடனாளிகளாக வாழ்பவர்கள் தான். திருநெல்வேலி நாச்சிமுத்து மட்டுமல்ல உலக பணக்காரராக இருக்கும் நம் அண்ணன் அம்பானி கூட கடனாளி தான். தயாரிப்பாளர் அஷோக் குமார் மட்டுமல்ல மூன்று முதல்வர்களைக் கொண்ட நம் தமிழக அரசும் கூட கடனாளி தான். இங்கு எல்லா வகையான தவறுகளுமே மிக இயல்பாகவே நடந்துகொண்டு தான் இருக்கிறது, கண்டு கொள்ளவோ எதிர்த்துக் கேட்கவோ ஆளே இல்லாமல்.அப்படியே யாராவது அத்தகைய அநீதிகளுக்கு எதிராக போராடினாலும் அதை வெறும் செய்தியாக மட்டுமே […]

Continue Reading

ரசிகனுக்கு என்ன செய்யப் போகிறார்கள் தியேட்டர்க்காரர்கள்?

எங்கள் ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அந்த திரையரங்கம் இருந்தது. தும்பை நிறத்தில் அகலமாய் விரிந்திருந்தத் திரைக்கு அருகில் குளிர்ந்த மணலோடும், கொஞ்சம் பின்னால் மரத்தாலான நீண்ட பெஞ்சுகளோடும், அதற்கும் பின்னால் சிவப்பு வண்ணம் பூசிய நாற்காலிகளோடும், தகரத் தட்டுகளால் ஆன கூரையோடும் ஆன அதன் அமைப்பு இப்போது நினைக்கையிலும் நெஞ்சினில் ஈரத்தோடு அப்படியே தான் இருக்கிறது. அங்கே தான் சினிமா அறிமுகமானது. அங்கேதான் ஆதர்ஷ நாயகர்கள் அறிமுகமானார்கள். மாதத்திற்கு மூன்றோ அல்லது நான்கோ என்று அளவாகவே […]

Continue Reading