நான் ஏற்கனவே அரசியலில் தான் இருக்கிறேன் – ரஜினி, கமல் வழியில் இளம்நடிகர்

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் இறங்குவதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் உதயநிதி அரசியலில் இறங்க தயார் என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு நடிகர்கள் அரசியலில் இறங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன். நான் திமுக-வில் ஒரு அங்கம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு […]

Continue Reading

பரிசீலனைக்கு வந்த வேட்புமனுக்களில் மூன்று ஏற்பு

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட நேற்று ஒரே நாளில் மட்டும் 115 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு […]

Continue Reading

சுயேட்சை வேட்பாளராக விஷால்

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதுவரை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. தேமுதிக, பாமக கட்சிகள் இடைத்தேர்தலை […]

Continue Reading

ஆர் கே நகரில் அதிரடி காட்ட வரும் விஷால் ?

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்று அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு […]

Continue Reading

நடிகர்கள் போடும் முதல்வர் கணக்கு!

நிச்சயமாக தமிழக அரசியலின் போதாத காலம்தான் இது. இருபெரும் துருவங்களாக தமிழகத்தின் அரசியலை நிர்மாணித்தவர்களாக இருந்த கலைஞரும், ஜெயலலிதாவும் சுகவீனப்பட்டுப் போக.. இத்தனை ஆண்டுகளாக வேறு யாருக்கும் விட்டுத் தராமல் கட்டிக்காத்து வந்த களம், இரு தலைமைகளின் வாரிசுகளை சோதனைக்கு மேல் சோதனைகளை சந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த யூகிக்க முடியாத குழப்பங்கள் சுழற்றியடிக்கும் சூழல் ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் சினிமாப் புகழையும் தங்களுக்கிருக்கிற ரசிகர் படையையும் வைத்து எப்படியாவது இந்த களத்தைக் கைப்பற்ற முடியுமா? […]

Continue Reading

கருணாநிதியுடன் மு க அழகிரி சந்திப்பு

நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு க முத்து – சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி கே ரங்கநாதன் – தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், சில தினங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த […]

Continue Reading

கோபாலபுரத்தில் கல்யாண வைபோகம்

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனு ரஞ்சித்திற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கோபாலபுரத்தில் கருணாநிதி முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. மணமக்களை, கருணாநிதி வாழ்த்தி ஆசிர்வாதம் வழங்கினார். இவ்விழாவில் கலந்து கொண்ட கவிப்பேரரசு வைரமுத்து, மணமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, கலைஞர் அவர்கள் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது […]

Continue Reading

கருணாநிதியிடம் வைர விழா அழைப்பிதழ் வழங்கிய ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதி, தமிழக சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏ-வாக அடி எடுத்து வைத்து, தற்போது 60 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதை வைரவிழாவாகக் கொண்டாட முடிவுசெய்து, கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க-வினர் உற்சாகமாக வேலைசெய்து வருகின்றனர். கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, இந்த வைர விழா நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை, மு.க.ஸ்டாலினும் துரைமுருகனும் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தனர். வைரவிழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் அளித்துள்ளனர். அதன் […]

Continue Reading