தலைவராக பதவியேற்றுக் கொண்ட மோகன்லால்
கேரளாவில் மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக நடிகர் இன்னசென்ட் எம்.பி. இருந்துவந்தார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக இன்னசென்ட் அறிவித்தார். இதை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக நடிகர் சங்க கூட்டம் கொச்சியில் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிய தலைவராக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ., […]
Continue Reading