மலேசியாவில் பரவசமான தேவி ஸ்ரீபிரசாத்

விக்ரம் நடிப்பில் ஹரியின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் வழக்கத்தை விட கூடுதலான மகிழ்ச்சியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கம் மலேசியாவில் நடத்திய நட்சத்திர கலைவிழாவில் நான் மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்ற என்னுடைய நிகழ்ச்சியை, அனைத்து திரையுலக நட்சத்திரங்களுடன் முன் வரிசையில் அமர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், […]

Continue Reading

நிர்வாகத் தவறு அல்ல; குற்றம் – விஷால்

கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொடுங்கையூரில் உள்ள ஆர் ஆர் நகர் பகுதியிலும் மழை நீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. நேற்று அந்த மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகள் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக […]

Continue Reading

சிலை எங்கிருந்தாலும் மகிழ்ச்சி : ராம்குமார்

சிவாஜிகணேசனின் 16-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜிகணேசன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. சிலையின் அருகில் அவரது படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிவாஜி சிலைக்கு அவரது மகன் ராம்குமார், பேரன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் சூளை ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் மரியாதை செலுத்தினார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் சிவாஜி சிலைக்கு […]

Continue Reading