நடிகர் சங்க தேர்தலை கிண்டல் செய்த ஆர் ஜே பாலாஜி!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்களித்தனர். அப்போது வாக்களிக்க வந்த நடிகர் ஆர் ஜே பாலாஜி, செய்தியாளர்களிடம், ‘ இந்த தேர்தல் நாட்டுக்கு ரொம்ப தேவையான தேர்தல். இந்த தேர்தல் மூலமாக நதிகள் இணைக்கப்பட்டு விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு ஜி எஸ் டி ஒழிக்கப்பட்டு எல்லா பிரச்சனைகளும் இந்த தேர்தல் மூலமாக தீர்ந்து விடும்.’ என்று நடிகர் சங்கத் தேர்தலை கிண்டல் செய்து பேசினார். இவரது,இந்த கிண்டல் […]

Continue Reading

நடிகர் சங்க தேர்தல்: சினிமா படப்பிடிப்புகள் 23-ந்தேதி ரத்து

ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற இருப்பதால், அன்றைய தினம் படப்பிடிப்புகள் ரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை ராஜா அண்ணாமலைபுரம், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு உறுப்பினர்களுக்கு […]

Continue Reading

மெர்சல் பிரச்சனையில் மௌனம் கலைத்த விஷால்…

மெர்சல் படத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வரும் வேளையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய நடிகர் விஷால் தனது ஆதரவை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். விஷால் தனது அறிக்கையில் கூறி இருப்பதாவது, ”மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுகளும்! மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு பாஜகவை சேர்ந்த தலைவர்கள் […]

Continue Reading

மெர்சல் பிரச்சனையில் மௌனம் காக்கும் விஷால்.. காரணம் என்ன?

  மெர்சல் திரைப்படத்திற்கு எதிராக தமிழக பாஜக போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்த வேளையில், மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக பல தரப்பினரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் கமல ஹாசன், அரவிந்த் சுவாமி, ஜிவி பிரகாஷ்குமார், ஆர்ஜே பாலாஜி, சரத்குமார், நடிகைகள் ஸ்ரீ ப்ரியா, குஷ்பூ, ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், சீனு ராமசாமி, பா.ரஞ்சித் ஆகியோர் மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட அந்த காட்சிகளை  நீக்க வேண்டிய அவசியமில்லை […]

Continue Reading

திருமணம் குறித்து நடிகர் விஷால் பேச்சு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தமிழ் சினிமா குறித்தும், தனது திருமணம் குறித்தும் பேசினார். நடிகர் விஷால் விழாவில் பேசியதாவது… ”நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிந்த பிறகு தான்  திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளேன். அதனை நினைவூட்டுவதற்காகவே  கார்த்தியின் முன்பு அடிக்கடி வேஷ்டி சட்டை அணிந்து  நிற்கிறேன். நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை மேடையில் கார்த்தியும் […]

Continue Reading

நடிகர் சங்க புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: கமல், ரஜினி பங்கேற்பு

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் ரஜினியும், கமலும் முதல் செங்கலை எடுத்துக் கொடுத்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரஜினியும், கமலும் குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத காரணத்தால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர் ஆகியோர் முதல் செங்கலை எடுத்துவைத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், நடிகர் சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு செங்கல் கொடுக்கப்பட்டு, […]

Continue Reading

பழம்பெரும் நடிகை கே.ஆர்.இந்திரா காலமானார்

பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் அனுராதாவின் அக்காவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெயகீதாவின் தாயாரும் கலைமாமணி பட்டம் பெற்ற பழம்பெரும் நடிகையுமான கே.ஆர்.இந்திரா வயது – 65 இன்று காலமானார். இவர் ‘கொஞ்சும் குமாரி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதே படத்தில் தான் பழம்பெரும் நடிகையான மனோரமாவும் அறிமுகமானார்கள். கே.ஆர்.இந்திரா, எம்.ஜி.ஆர் நடித்த ‘பெற்றால் தான் பிள்ளையா’ படத்தில் நம்பியாருக்கு ஜோடியாக நடித்தார். மேலும் கந்தன் கருணை, சிந்து பைரவி, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடித்த “மன்னன்“ , […]

Continue Reading