வருத்தப் படாத வாலிபர் சங்கம் பார்ட் 2!

  “வேலைக்காரன்” படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், சிவ கார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். சிவா இந்தப் படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் பொன்ராம் உடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். முதல் முறையாக சமந்தாவுடன் ஜோடி சேர்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோரும் நடிக்கின்றனர். பொன்ராமின் ஆஸ்தான இசையமைப்பாளர் D.இமான் இந்தப் படத்திற்கும் […]

Continue Reading

வெயிலை வெறுக்கும் சமந்தா

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – பொன்ராம் – சூரி – டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக முதல்முறையாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ படங்களைத் தயாரித்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது. பொன்ராம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் […]

Continue Reading

15 வருடத்திற்குப் பிறகு இணையும் சரத்குமார் – நெப்போலியன்

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சென்னையில் ஒரு நாள் -2’. சரத்குமார் நடித்த வெற்றிப்படமான சென்னையில் ஒரு நாள் படத்தைப் போன்று பரபரப்பான த்ரில்லர் படம் என்பதால் படக்குழுவினர் இப்படத்திற்கு சென்னையில் ஒரு நாள் -2 என்று பெயரிட்டுள்ளனர். பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கிரைம் நாவல்களின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சரத்குமார் ரகசிய உளவாளியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் கோவையில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், […]

Continue Reading