சத்யராஜுக்கு முன் கட்டப்பாவாக நடிக்க தேர்வானது இவர்தானாம்

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா […]

Continue Reading

அமைதி காக்கும் அனுஷ்கா

‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர். அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளத்தில் தயாராகும் ‘சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல்கள் வந்தன. அதுவும் இல்லை என்று ஆனது. பிரபாஸ் ஜோடியாக இந்தி நடிகை ‌ஷரத்தா கபூர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது ‘சாஹோ’ படத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகிவிட்டார். அனுஷ்கா ‘பாகுபலி-2’-ல் நடித்தபோது ‘பாக்மதி’ என்ற தெலுங்கு […]

Continue Reading

பிரபாஸூக்கு கிடைத்த புதிய ஜோடி

‘பாகுபலி-2’ க்கு பிறகு பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் ‘சாஹோ’. இது தமிழ்,தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகிறது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் நாயகியாக அனுஷ்கா நடிக்கப் போவதாக முதலில் செய்தி வெளியானது. பின்னர் அவர் கால்ஷீட் இல்லாததால் இதில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. தமன்னா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இவர்கள் இருவரும் நடிக்கவில்லை. இந்தி பட முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது என்று […]

Continue Reading

பாகுபலியைத் தொடர்ந்து சங்கமித்ராவிலும் கட்டப்பா

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீசாகி தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் `பாகுபலி’-2. வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள `பாகுபலி’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாகுவதற்கு சத்யராஜின் கட்டப்பா கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில், `பாகுபலி’ படத்தின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சத்யராஜ், மற்றுமொரு வரலாற்றுக் கதையில் நடிக்க இருக்கிறாராம். சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் `சங்கமித்ரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சுந்தர்.சி. […]

Continue Reading

பாகுபலிக்கு அடுத்தபடியாக புலி

மலையாளத் திரையுலகின் மோகன்லால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வெளியிடப்பட்டு, 150 கோடி வசூல் சாதனை செய்த படம் “புலிமுருகன்”. மோகன்லாலின் சினிமா வாழ்க்கைக்கு கிரீடமான புலிமுருகன் அதே பெயரில் தமிழில் 3D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. மலையாளத்தில் புலிமுருகனை தயாரித்த பிரபல பட நிறுவனமான முலக்குபாடம் பிலிம்ஸ் சார்பில் டோமிச்சன் முலக்குபாடம் புலிமுருகன் படத்தைத் தமிழிலும் உருவாக்குகிறார். கதாநாயகியாக கமாலினி முகர்ஜி நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, லால், கிஷோர், நமீதா நடித்திருக்கிறார்கள். ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் […]

Continue Reading

கால்ஷீட் கொடுக்காத அனுஷ்கா, காத்திருக்கும் இயக்குநர்

‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனுஷ்கா மிகவும் பிரபலமாகி விட்டார். அவரை இந்தி பட உலகத்துக்கு இழுக்க பல முன்னணி டைரக்டர்கள் போட்டி போடுகிறார்கள். பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அனுஷ்கா எதையும் ஏற்கவில்லை. இந்த நிலையில், டைரக்டர் நிவாஸ் இயக்கும் ‘ஜுவலைல்’ என்ற இந்தி படத்துக்கு அனுஷ்காவிடம் கதை சொல்லப்பட்டது. அனுஷ்கா கதை பிடித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். என்றாலும் இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை. ஆனால், “இந்த படத்திற்கு அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்த பிறகே படத்தைத் தொடங்குவேன். […]

Continue Reading

நான் இந்த நிலைக்கு வரக் காரணம் இவர் தான் : ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணனுக்கு ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு தனி அந்தஸ்து கிடைத்துள்ளது. இதுபற்றி கூறிய அவர்… ‘படையப்பா’ படத்தில் நான் நடிக்கும் வரை என்னை யாரும் சொந்த குரலில் பேச அனுமதிக்கவில்லை. ஆனால் அந்த படத்தில் நான் ஏற்ற நீலாம்பரி பாத்திரத்துக்கு நான் தான் சொந்த குரலில் பேச வேண்டும் என்று ரஜினிசாரும், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சாரும் சொன்னார்கள். என் குரல் வேண்டாம் என்று பலர் சொன்னாலும், அவர்கள் இரண்டு பேரும் நான்தான் பேச வேண்டும் என்றார்கள். […]

Continue Reading

வதந்தி குறித்து துப்பு துலக்கிய அனுஷ்கா

`பாகுபலி’ படத்தில் நடித்ததற்காக மிகப்பெரிய பாராட்டு பெற்றவர் அனுஷ்கா. அவரை ரசிகர்கள் மட்டுமல்ல, திரை உலகினரும் பாராட்டி உள்ளனர். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் அனுஷ்கா பற்றி ஏதாவது `கிசு கிசு’ கிளம்பும். ஏற்கனவே, இவர் படங்களில் இணைந்து நடித்த நாயகர்கள் ஆர்யா, ராணா, நாகர்ஜுனா, இயக்குனர் கிரிஷ் ஆகியோருடன் இணைத்து பேசப்பட்டார். அந்தந்த கால கட்டங்களில் அவர்களை அனுஷ்கா திருமணம் செய்யப்போவதாக புரளிகள் கிளம்பின. இப்போது `பாகுபலி’ படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த பிரபாசை அவர் […]

Continue Reading