கர்நாடகாவில் பாஜக ஆட்சி

கர்நாடக மாநிலத்தில் கடந்த 12-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்றன. 9 மணிக்குப் பிறகு நிலைமை மாறியது. ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவை […]

Continue Reading

தேவைப்பட்டால் புதிய கட்சி : பிரகாஷ்ராஜ்

நடிகர் பிரகாஷ்ராஜ் தனது நண்பரும், சமூக ஆர்வலமான கெளரி லங்கேஷ் கொலைக்குப் பின் அரசியலில் ஈடுபட்டு பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்துக்கு நடுவே நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “நான் இப்போதைய தேர்தல் அரசியலில் இல்லை. ஆனால் நான் கர்நாடகத்தில் அரசியலில் இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எதிர்காலத்தில் தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டம் இருக்கிறது. எனது பிரசாரம் இன்னும் 10 […]

Continue Reading

குஜராத்தில் நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

22 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் குஜராத் சட்டசபையின் பதவி காலம் ஜனவரி மாதம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 9-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. 2-வது மற்றும் இறுதிக் கட்டமாக நாளை 93 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 69 பேர் பெண்கள். பா.ஜனதா சார்பில் 93 வேட்பாளர்களும், காங்கிரஸ் […]

Continue Reading

விஜய் சேதுபதிக்கு ஒரு “ மெர்சல் ஹிட்” பார்சல்!

விஜய் சேதுபதி உண்மையிலேயே தமிழ் சினிமாவின் ஆச்சர்ய பேக்கேஜ். ஆல் செண்டர்களிலுமே கெத்து காட்டும் முரட்டுத்தனமான பெர்ஃபார்மர். கதைகளைத் தேர்ந்தெடுப்பதை விட வெயிட்டான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அத்தனையிலுமே தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்திற்கு போய்க்கொண்டே இருப்பவர். இவை மட்டுமில்லாமல் தேவையில்லாமல் எந்த சர்ச்சையிலுமே சிக்கிக் கொள்ளாமல் சாமர்த்தியமாய் நடைபோடுபவர். ஆனால் ஒற்றை வசனத்தைக் கொண்டு விஜய் சேதுபதியை நோக்கி வசவுக்கணைகளை வீச ஆரம்பித்திருக்கிறார் சர்ச்சை புகழ் எச்.ராஜா. விஜய் சேதுபதி நடிப்பில் “ஒரு நல்ல நாள் பார்த்து […]

Continue Reading

ஆர் கே நகரில் அதிரடி காட்ட வரும் விஷால் ?

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர் கே நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 27-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அன்றைய தினம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேச்சைகள் மட்டுமே மனுதாக்கல் செய்தனர். நேற்று அதிமுக. வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்தனர். காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை திமுகவுக்கு ஆதரவு […]

Continue Reading

அரசியல்வாதிகளை வறுத்தெடுத்த எஸ்.ஏ.சி!

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், […]

Continue Reading

போலீஸ் பாதுகாப்பில் சிம்பு!

மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக பிரச்சாரம் செய்யப்படுகிற, எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்திய வரலாற்றில் மக்கள் மீதான மிக மோசமான நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டுகிற “பணமதிப்பிழப்பு” திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்த எட்டாம் தேதியோடு ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டது. இந்த நாளை எதிர்க் கட்சிகள் எல்லாம் கருப்பு நாளாக அனுசரித்தன. இந்நிலையில் அந்த நாளில் “தட்றோம் தூக்குறோம்” படக்குழுவினர் வெளியிட்டுள்ள “டிமானிட்டைஷேசன் ஆந்தம்” பாடலுக்கு தமிழக பாஜக கண்டனங்களையும், எதிர்ப்பையும் கிளப்பி வருகிறது. பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து […]

Continue Reading

ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு – விசு ஆரூடம்

நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த ‘இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என்று சொல்ல முடியாது’ என்ற கருத்திற்கு, இந்தியாவில் பல முனைகளில் இருந்தும் கண்டனக் குரல்களும், மிரட்டல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. கமலின் கருத்திற்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமாகிய விசு கமலின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஹலோ கமல்ஜீ… நீங்க நடிச்ச ‘சிம்லா ஸ்பெஷலுக்கு’ கதை திரைக்கதை வசனம் […]

Continue Reading

“ரியல் ஆக்‌ஷனில்” இறங்கிய நடிகர் சந்தானம்!

நகைச்சுவை நடிப்பிலிருந்து நாயகனாக வளர்ந்துள்ள நடிகர் சந்தானம் பாஜக பிரமுகரைத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டும், அதற்கு தமிழக பாஜக தலைவரின் கண்டனமும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படித்திருக்கிறது. முன்னதாக பண விவகாரத்தில் ஆத்திரமடைந்து கட்டுமான நிறுவன உரிமையாளரை தாக்கியதாக நடிகர் சந்தானம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த காரணங்களைக் கேட்டறிந்ததிலிருந்து.. சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்யும் பில்டராக தொழில் செய்து வருகிறார். இவருடன் சேர்ந்து […]

Continue Reading

தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்த சீதாராமனை முன்னிலைபடுத்த முடிவு?

மத்திய மந்திரி சபையில் வர்த்தக மற்றும் தொழில் துறை மந்திரியாக இருப்பவர் நிர்மலா சீதாராமன். தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வந்தால் மத்திய அரசு ஒத்துழைக்கும் என்று அவர் சமீபத்தில் தெரிவித்தார். வர்த்தக மந்திரியாக இருக்கும் நிர்மலா சீதாராமன் சுகாதாரத் துறை தொடர்பாக கருத்து தெரிவித்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது. வர்த்தக மந்திரி நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதேபோல கம்யூனிஸ்டு கண்டனம் […]

Continue Reading